பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

133

சிவடெருமான் தன் சடையில் சூடிய பிறையில் உள்ள அமுதத்தைத் தெளித்து இந்நகரை நிர்மாணித்தால் இந்நகரமானது மதுரமாக இருந்திருக்கிறது. இன்னும் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்னும் நால்வரும் பிரபலமாக இருக்கும் இடம் ஆனதால் நான்மாடக் கூடல் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கன்னியான மீனாக்ஷி இருந்து அரசு புரிந்ததால் கன்னிபுரீசம் என்றும், சிவபெருமான் சுந்தரபாண்டியனாக இருந்து அரசாண்ட சாரணத்தால் சிவராஜதானி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இத்தலத்தில் மாதமொரு திருவிழா. எப்படிக் காஞ்சி கோயில்கள் நிறைந்த நகரமோ அதுபோல் இந்த நகரம் விழாக்களால் சிறப்பான நகரம். மதுரையில் மீனாக்ஷி கோயிலைப் பார்ப்பதோடு அங்குள்ள திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்த் தெப்பக்குளம், கூடல் அழகர் கோயில் முதலியவைகளையும் பார்க்கத் தவறக்கூடாது. கூடல் அழகர் ஊரின் மேற்கோடியில் இருக்கிறார். மூன்று தலங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் சேவை சாதிக்கிறார்.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் 44. இன்னும் திருமுகச் செப்புப் பட்டயங்களும் உண்டு. பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன், குலசேகர தேவர், மல்லிகார்ச்சுனராயர், கோனேரின்மை கொண்டான், விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், முதலியோரது திருப்பணிகள் இக்கோயிலும் மண்டபங்களும். இவைகளின் லிவரங்களெல்லாம் திருப்பணி மாலை என்ற பாடலில் வரிசையாக அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தனை சொல்லியும் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டால் இத்தலத்தின் வரலாறு பூரணமாகாது. இத்தலத்தின் பெருமையே இங்கு இறைவன் நடத்திய அறுபத்திநான்கு திருவிளையாடல்களின் பெருமைதான். இதனை வடமொழியில் ஹாலாசிய மகாத்மியத்திலும், தமிழில் பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் காணலாம். இந்திரன் வழிபட்டது, மீனாக்ஷியைத் திருமணம் செய்தது. பிட்டுக்கு மண் சுமந்தது, வன்னியும் கிணறும் இலிங்கமும் அமைத்தது. கால் மாறி ஆடியது முதலியவை முக்கியமானவை. இவைகளுக்கெல்லாம்