பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தனித்தனி திருவிழாக்களே நடக்கின்றன. கோயில்களின் பல பாகங்களில் இதற்குரிய சிற்ப வடிவங்களும் இருக்கின்றன அவைகளைத் துருவிக் காண ஆசையும், அதற்கு வேண்டிய அவகாசமும் வேண்டும்.

இத்தலத்துக்கு அப்பரும், சம்பந்தரும் வந்திருக்கிறார்கள். மாணிக்கவாசகர் வரலாறு முழுக்க முழுக்க இத்தலத்தில் நடந்தது தானே! சம்பந்தர் இங்கு வந்ததும், பாண்டியனை! சைவனாக்கியதும், சமணர்களைக் கழுவேற்றியதும் பிரசித்தமான காவியமாயிற்றே! கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் இந்தத் தலத்தில் பெருமை பெற்றவர்கள் மங்கையர்க்கரசியையும் அங்கயற்கண்ணியையும் சேர்த்தே வழிபடுகிறார் சம்பந்தர்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை,
வரிவளைக்கை மடமாணி?
பங்கயச் செல்வி, பாண்டிமா தேலி
பணி செய்து நாடோறும் பரவ
பொங்கழல் உருவன் பூத நாயகன், நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.

என்பதுதானே அவரது பாடல். நானும், 'ஆலவாய் எனபது இதுதான்' என்று சுட்டிக் காட்டிவிட்டு நின்று கொள்கிறேன். மதுரையைப் பற்றி இவ்வளவுதானா சொல்லலாம்? 'சொல்லிடில் எல்லை இல்லை' என்பதுதான் என் அனுபவம்.