பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. பரங்குன்றம் மேய பரமன்

ஒரு பழைய கதை. ஓர் ஊரிலே ஒரு பூதம் வாழ்கிறது. கற்முகி என்ற பெயரோடு. அப்பூதம் சிவ பூசையில் தவறியவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்து வைக்கிறது. அப்படி ஆயிரம் பேரைச் சேர்த்தபின் அத்தனை பேரையும் அப்படியே கொன்று தின்பது என்ற விரதம் பூண்டிருக்கிறது. 999 பேரை, ஆம், சிவ பூசையில் தவறியவர்களைத்தான், பிடித்துச் சிறை வைத்து விடுகிறது. கடைசியாக ஆயிரம் ஆக்க ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் நக்கீரர் உருவத்தில் வருகிறார். மதுரை சங்கப் புலவர்களுள் சிறந்தவராக இருந்தவர் நக்கீரர். இறைவனோடேயே வாதிட்டவர்; 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று கூறி அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர், அவர் ஒரு குளக்கரையில் ஒருநாள் காலை உட்கார்ந்து சிவபூசை செய்கிறார். அக்குளக்கரையில் ஓர் அரசமரம். அந்த மரம் குளம் இவைகளில் ஒரு விநோதம், அந்த மரத்தின் இலை தரையில் விழுந்தால் பறவையாக உயிர் பெறும் தண்ணீரில் விழுந்தால் மீனாக மாறும், நக்கீரர் பூசை செய்து கொண்டிருந்தபோது ஓர் இலை பாதி தன்ணீரிலும் பாதி தரையிலுமாக விழுந்தது. தரையில் விழுந்தது. பறவையாகவும் தண்ணீரில் விழுந்தது மீனாகவும் மாறுகின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று விடாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் மனம் மலைப்புறுகிறது. செய்து வந்த சிவபூசை தவறுகிறது. பூதந்தான் எப்போது என்று காத்திருக்கிறதே உடனே, அங்கு தோன்றி நக்கீரரைப் பிடித்துக் கொண்டு போய் சிறையில் தள்ளிவிடுகிறது. ஆயிரம் பேர்கள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில், அவர்களையெல்லாம் உண்பதற்குமுன்