பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வேங்கடம் முதல் குமரி வரை

நீராடிவரச் செல்கிறது. பூதத்தின் வரலாற்றைச் சிறையிலிருந்த மற்றவர்களிடம் கேட்டுத் தெரிகிறார் நக்கீரர். உடனே தம்மையும் மற்றவர்களையும் விடுவிக்க, முருகனைத் துதிக்கிறார். அப்படி அவர் பாடிய பாட்டுத்தான் பத்துப் பாட்டில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படை என்பது வரலாறு. இந்த வரலாற்றை பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் பாடியிருக்கிறார்.

ஏர்கொண்ட பொய்கைதனில்
நிற்குமொரு பேர் அரசின்
இலைகீழ் விழில் பறவையாம்,
இதுநிற்க, நீர்விழில் கயலாம்,
இதுஅன்றி ஓரிலை அங்கு இங்குமாகப்

பார்கொண்ட பாதியும் பறவைதானாக
அப்பாதியும் சேலதாக,
பார் கொண்டிழுக்க அது
நீர்கொண்டிழுக்க இப்படிக் கண்டது
அதிசயம் என்ன

நீர்கொண்ட வாவிதனில்
நிற்குமொரு பேழ்வாய் நெடும் பூதம்
அது கொண்டுபோய்
நீள்வரை எடுத்து அதன்கீழ் வைக்கும்
அதுகண்டு நீதிநூல் மங்காமலே

சீர்கொண்ட நக்கீரனைச்
சிறைவிடுத்தவா செங்கீரை ஆடி அருளே
திரை எறியும் அலைவாய்
உகந்த வடிவேலனே செங்கீரை
ஆடி அருளே !

என்பது பாட்டு. இப்படி நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடுவதற்குக் காரணமாயிருந்த குளமும் மரமும் இருந்த தலம்தான் திருப்பரங்குன்றம், அதனாலே முருகாற்றுப்படையில் சொல்லப்படும்