பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேங்கடம் முதல் குமரி வரை

அங்குள்ள கோபுர வாயிலுக்கு முன்னால் பெரிய மண்டபம், அதனைத் தாங்கி நிற்பவை சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த நாற்பத்தெட்டு தூண்கள் என்றால், மண்டபம் எவ்வளவு பெரிது என்று கணக்கிட்டச் கொள்ளலாம் அல்லவா?

திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தை ஏனோ சுந்தரபாண்டியன் மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் துவஜ ஸ்தம்பக் கூடம் இருக்கிறது. அங்கிருந்து படிகள் ஏறி மேலே சென்றால் மலையைக் குடைந்து அமைத்த குடைவரைகள் இருக்கும், அதில் முருகன், திருமால் துர்க்கை, விநாயகர், சிவன் முதலியவர்கள் இருப்பார்கள், கோயிலில் உள்ள மண்டபங்களில் அரிய நாத முதலியார், திருமலை நாயக்கர் முதலியோர் இருக்கின்றனர், சிலா வடிவில். இக்கோயிலில் மூலவர் பரங்கிரிநாதர் என்று லிங்கத் திருவில் உள்ள இறைவனே. இவருடைய துணைவியே ஆவுடைநாயகி. என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் முருகனே. அன்று திருச்சீரலை வாயிலில் சூரபதுமனைச் சம்ஹரிக்க, அதற்கு வெற்றிப் பரிசாகத் தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை மணம் முடித்துக் கொடுத்தான் என்பது வரலாறு. அந்தத் தேவசேனை திருமணம் நடந்த இடம் இத்திருப்பரங்குன்றமே. முருகனுக்கு அருகில் தேவசேனையும் நாரதரும் இருக்கின்றனர். அங்குள்ள குடைவரைச் சுவரில் அர்த்த சித்திரமாக அமைந்த சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கைலைக் காட்சி. கைலை மலையிலே பார்வதி ஒயிலாக நிற்கின்ற நிலை சிற்ப வடிவத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இங்குள்ள முருக வேளிடத்துத்தான் நக்கீரர் அடியவர்களை முதலில் ஆற்றுப்படுத்தியிருக்கிறார். மதுரை திருப்பரங்குன்றம் இரண்டையும் இனைத்தே பாடியிருக்கிறார்.

செருப்புகள்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி, வரிப்புனை பந்தோடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திரு வீற்றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடல் குடவயின்