பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேங்கடம் முதல் குமரி வரை

பன்னிய பாடல்
ஆடலால் மேய பரங்குன்றை
உள்னிய சிந்தை
உடையவர்க்கில்லை உறுநோயே

என்பது சம்பந்தர் தேவாரம், சுந்தரரோ, இத்தலத்துக்கு முடியுடை மூவேந்தரும் வந்து வணங்கி அருள் பெற்றதையும் விளக்கமாக உரைத்துப் பாடுகிறார்.

அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதும்என்
அமரர் பெருமானை, ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்து ஆறும்ஓர், நான்கும் ஓர் ஒன்றிய
படியால் இவை கற்றுலல்ல அடியார்
பரங்குன்ற மேய் பரமன் அடக்கே
குடியாகி, வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் வின் முழுதாள்பலரே.

என்பது அவரது பாடல்.

இக்குன்றத்தில் அன்று ஒரு சித்திரசாலை இருந்திருக்கிறது. அங்கே சூரியன் முதலிய கோள்கள், தாரகைகள், நாள்மீன்கள் எல்லாம். காட்டும் சித்திரம் இருந்திருக்கிறது, ரதி மன்மதன், இந்திரன், அகலிகை கௌதமன் முதலியோரது சித்திரங்களும் இருந்திருக்கின்றன. இன்று அந்தச் சித்திரசாலையை அங்கு காணோம். கோயிலும் குடைவரையும் பிரும்மாண்டமானதாயிருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் துருவித் துருவிப் பார்க்க நல்ல அவகாசம் வேண்டும்.

பரங்குன்றத்துக்கு வந்த நாம், கோயிலுள் செல்வதுடன் மாத்திரம் திருப்தி அடைய முடியாது. மலை ஏறிச் சுற்றியுள்ள காட்சிகளையும் காணவேண்டும். மலைமேல் ஏறிச் சிறிது தூரம் சென்றால் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே ஒரு சமாதி