பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வேங்கடம் முதல் குமரி வரை

நந்தவனத்தில் திருத்துழாய் மரத்தடியில் ஒரு பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு எடுத்து வந்து அவரது மனைவியான

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்

விரலஜயிடம் கொடுக்கிறார். குழந்தைக்குக் கோதை என்ன பெயரிட்டு அன்போடு வளர்க்கின்றனர். கோதையும் தன் தோழியருடன் எல்லாம் களிப்புடன் லிளையாடி மகிழ்கிறாள். ஒருநாள் லிஷ்ணுசித்தர் பெருமாளுக்கு என்று தொடுத்திருந்த பூமாலையைத் தன் கூந்தலிலே சூட்டி அழகு பார்க்கிறாள். பின்னர் மாலையை களைந்து வைத்து விடுகிறாள். அவள் சூடிக் களைந்த மாலை பின்னர் பெருமாளுக்கு அணியப் பட்டிருக்கிறது. இப்படியே நடக்கிறது பல நாட்களும்.

ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதை மாலை சூடி அழகு பார்க்கும்போது கண்டு விடுகிறார். இதற்காக மகளைக் கோபித்துவிட்டு அன்று பெருமாளுக்கு மாலை சாத்தாமலேயே இருந்து விடுகிறார். ஆனால் பெருமாளோ இரவில் அவரது கனவில் தோன்றி, கோதை சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உகந்த மாலைகள், அவளே என் ஆண்டாள் என்று சொல்கிறார். விஷ்ணுசித்தராம் பெரியாழ் வாருக்கோ ஒரே மகிழ்ச்சி. அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளையே பெருமாளுக்கு அணிவிக்கிறார். இப்படி பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி