பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

149

உறைவார், அல்லல் தவிர்த்த பிரான் முதலியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த வடபத்திரசயனர் கோயில்தான் ஆதிக்கோயில், ஆண்டாள் கோயில் பின்னால் எழுந்ததே.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் பலப்பல பாசுரங்கள் பாடியிருந்தாலும் வில்லிப்புத்துரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரன்டே இரண்டுதான்.

மந்றைய ஆழ்வார்கள் இந்த வடபத்திரசயனலன மங்களாசாஸனம் செய்ததாகத் தெரியவில்லை.

ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவமே பெரிய திருவிழா. அதில்தான் தேரோட்டம் எல்லாம், பங்குனியில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பானதே. இந்த நாச்சியார் கோயிலைச் சேர்ந்த சுற்றுக் கோயில்கள் ஒன்பது.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆண்டாள் கோயில் கருப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதலியவைகளைச் சுந்தரத்தோளுடைய மாவலி வாணாதிராயர் கட்டினார் என்று கோயிலின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இவரே சுந்தரத்தோள நல்லூர் என்ற சொக்கனேந்தல் கிராமத்தை நாச்சியாருக்கு மானியமாக விட்டிருக்கிறார். இரண்டு கோயில்களும் பாண்டிய மன்னர்களால் பரிபலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வடபத்திர சயனர் கோயில் ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகரன் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

இராமானுஜருக்கும் இந்தக் கோயிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இராமானுஜர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது, நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலை மாலிருஞ்சோலை சுந்தரராஜனுக்குப் படைக்கச் சொன்னபடி படைத்த தன் அண்ணா வருகின்றார் என்று ஏழடி முன் நடந்து எதிர்கொண்டு அழைத்திருக்கிறாள் ஆண்டாள். அது முதல் இராமானுஜரைக் 'கோயில் அண்ணன்' என்றே அழைத்திருக்கிறார்கள். கம்பர் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆண்டாளுக்குச் சூடகம் என்ற