பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வேங்கடம் முதல் குமரி வரை

என்று இறைவன் தாய் ஆகி உலக மக்களைப் புரக்கும் அருமையைப் பாடுகிறான் கம்பன். தாய்த் தன்மையிலும் தலைசிறந்த தாய்த் தன்மையாக அவன் கருதுவது பசுவுக்கும் கன்றுக்கும் உள்ள தொடர்பைத்தான். நாம்தான் பார்த்தோமே, ஒரு பசுவின் கன்று தன் தாயை ஆயிரம் பசுக்களிடையே நின்றாலும் கண்டு கொள்வதை. அதே போல் தன் கன்றையும் ஆயிரம் கன்றுகளிடையே நின்றாலும் தெரிந்த கொள்ளும் பசு. இது ஓர் அதிசய அறிவுதானே. அந்த அறிவை உடையவள் உலகு புரக்கும் அன்னை. ஆம், அதனாலே ஒரு பெயர் ஆவுடையாள்-கோமதி என்று. பசுக்களாகிய உயிர்களைத் தன் உடைமையாகக் கொண்டு காப்பாற்றுகிறவள் ஆவுடையாள். இந்த ஆவுடையாள் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் சங்கரன் கோயில், அந்தச் சங்கரன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

சங்கரன் கோயில் திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலூகாவின் தலை நகரம். நிரம்புப் பெரிய ஊரும் அல்ல, சிறிய ஊரும் அல்ல. தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்- தென்காசி லயனில் இருக்கிறது. ஆதலால் தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்-தென்காசி லயனில் இருக்கிறது. அதனால் அந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் இறங்கி ஒரு மைல் நடந்தால் கோயில் வந்து சேரலாம். இல்லை, காரிலேயே போவதானால் திருநெல்வேலியிலிருந்து 35 மைல் வடமேற்காய்ப் போக வேணும். வடக்கே இருந்து வருவதானால், மதுரை ஸ்ரீ வில்லிப்புத்தூர் ராஜபாளையம் ரோடு வழியாய் வரவேணும். இந்த வழி வந்தாலும் நல்ல பஸ் வசதியும் உண்டு.

கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அழகு செய்கிறது! ஒன்பது தட்டுகளை உடைய இந்தக் கோபுரம் 125 அடி உயரம் இருக்கிறது. இக் கோபுரத்தின் ஒன்பதாவது தட்டிலே ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மானி அங்குள்ள இயந்திரத்தின் துணைகொண்டு இரண்டு நாழிகைக்கு ஒரு முறை அடிக்கிறது. அதனால் அதனை நாழிகைக் கடிகாரம் என்று வழங்கியிருக்கின்றனர். சென்ற ஐம்பது ஆண்டுகளாகக் கடிகாரம் ஓடுகிறதில்லை மனியும் அடிக்கிறதில்லை.

கோபுரத்தின் முன்பு ஒரு பெரிய மண்டபம். இக்கோயில் மூன்று பெரும் பகுதி களாக இருக்கிறது. தெள் புறத்தில் சங்கர