பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

157

சொல்லியிருந்தார். பொன்னம்பலம் பிள்ளை உத்தரகோச மங்கை சென்று திருவுருவைக் கண்டு ஒரு பாட்டுப் பாடினார்;

புற்றெங்கே! புன்னை
வனம் எங்கே? பொற்கோயில்
சுற்றெங்கே? நாக
சுனை எங்கே?-இத்தனையும்
சேரத்தான் அங்கிருக்கத்
தேவரீர் தான் தனித்தித்
தூரத்தே வந்தென்ன சொல்.

உடனே பெருமானும்.

விள்ளுவமோ சீராசை
வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளில் செண்பகக்கண்
நம்பியான்-மெள்ளவே
ஆடெடுக்கும் கள்ளரைப்போல்
அஞ்சாத எமைக் கரிசல்
காடுதொறுமே இழுத்தக்கால்

என்று பாடியிருக்கிறார். இவ்விஷயம் சேதுபதி காதில் விழ, பொன்னம்பலம் பிள்ளை மூலமே திரும்பவும் மூர்த்தியைச் சங்கரன் கோயிலுக்கு அனுப்பியிருக்கிறார்.

உக்கிர பாண்டியர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்காலத்தே கருவை நகரில் உள்ள பிரகத்துவஜ பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்திருக்கிறார். இத்தலத்துக்கு ஒரு புராணம். சீவலமாற பாண்டியன் பாடியிருக்கிறார். அவர் இவ்வூரில் ஒரு குளம் வெட்டியிருக்கிறார். அது சீவலப்பேரி என்ற பெயரில் உடைகுளமாக இருக்கிறது. அவர் பெயராலேயே சீவலராயன் ஏந்தல் என்ற ஊரும் எழுந்திருக்கிறது.

மூவர் முதலிகள் இக்கோயிலுக்கு வந்து பதிகங்கள் பாடியதாக வரலாறு இல்லை. அன்பர் ஒருவர் சங்கர சதாசிவமாலை என்று