பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20. தென்காசி விசுவநாதர்

தென் பாண்டி மண்டலத்திலிருந்து அரசாண்ட பாண்டிய மன்னர்களில் பராக்கிரம பாண்டியன் என்று ஒரு மன்னன். இவன் தன் மனைவியுடன் காசி சென்று விசுவநாதரைத் தரிசிக்கிறான். தரிசித்து விட்டுத் திரும்பும் வழியில் மதுரை சொக்கலிங்கப் பெருமானையும் வணங்கி வழிபடுகிறாான். அன்றிரவு கனவில் சொக்கர் 'உன் ஊர்ப் பக்கத்திலும் ஒரு காசி கான்' என்று அருளுகிறார். அரசன் நினைக்கிறான், காசியில் இறக்க முத்தி என்கிறார்களே என்று. எத்தனை வயோதிகர்கள் தமிழ் நாட்டிலிருந்து அந்தத் தொலை தூரத்திலுள்ள காசிக்குச் செல்கிறார்கள். அப்படிப் போக இயலாதவர்களுக்கெல்லாம் முத்திப் பேறு வாய்ப்பதாக இல்லையே. காசி விசுவநாதான் எவ்வளவோ கருணை உடையவன் ஆயிற்றே, தன்னிடம் வர இயலாதவர்களைத் தேடி அவன் வருதல் கூடாதோ என்று எண்ணியிருக்கிறான். அந்த எண்ணம் காரணமாகவே தென் காசி ஒன்றை நிர்மானிக்கத் திருவுளங் கொள்கிறான். ஓர் எறும்பொழுக்கு வழிகாட்ட அந்த வழியிலே சென்றவன் சிற்றாற்றின் கரையிலே ஒரு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காண்கிறான். தான் விரும்பியபடியே காசி லிசுவநாதர்தான் அங்கு எழுந்தருளியிருக்கிறார் என்று உளம் பூரித்து அந்த விகவநாதருக்கு ஒரு கோயில், அந்தக் கோயிலைச் சுற்றி ஒரு நகரம் என்றெல்லாம் அமைக்கிறான். அந்தக் கோயில் கட்டி முடிய ஆறு வருஷங்கள் ஆகியிருக்கின்றன. தன் கஜானாலில் உள்ள பொன்ளையும் பொருளையும் கொட்டிக் குலித்துக் கோயிலைக் கட்டுகிறான். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, கோபுரம், விமானம். மதில் எல்லாவற்றையும் அமைக்கிறான், காசி விசுவநாதரையும் அங்கு எழுந்தருளப் பண்ணுகிறான்.