பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

கும்பாபிஷேகத்துக்கு என்று ஒரு நாளையும் குறிப்பிடுகிறான். அன்று கோயிலில் ஜே ஜே' என்று மக்கள் எல்லாம் சூழுமியிருந்தனர். பராக்கிரம பாண்டியன், மந்திரி பிரதானிகள் புடைசூழக் கோயிலுக்கு வருகிறான். வந்தவன் விசுவநாதர் சந்நிதிக்கு எதிரே தரையில் விழுந்து வணங்குகிறான். அவன் அப்போது யாரை வணங்குகிறான் என்பது கேள்வி. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதரையா? இல்லை, கோயில் கட்டத் தனக்குத் துணை புரிந்த தன் குடி மக்களையா? இத்தனை கேள்விக்கும் பதில் சொல்வதுபோல, அரசனுடன் வந்த புலவர் ஒரு பாட்டுப் பாடுகின்றார்.. அவர் பாடிய பாட்டு இதுதான்.

ஆராயினும் இத்தென்காசி
மேவு பொன் ஆலயத்து
வராததோர் குற்றம் வந்தால்
அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே திருத்திப் புரப்பார்
தமை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே

அரசனது உள்ளத்தை நன்குணர்ந்த கவிஞன் பாடி விட்டான், பாட்டும், பாட்டில் உள்ள கருத்தும் பராக்கிரம பாண்டியன் உள்ளத்தில் உள்ளதையே சொல்லியிருக்கிறது என்ற காரணத்தால் அரசன் அதனை அங்கீகாரம் செய்து அந்தப் பாடலைக் கோபுர வாயிலில் கல்லில் பொறித்து வைக்கிறான். உண்மைதானே? கோயில் கட்டுவது எளிது. அதைச் சரியாகப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? அதிலும் அந்தக் கோயிலுக்குத் தீங்கு ஒன்று நேர்ந்து அந்தத் தீங்கை நிவர்த்தி செய்து திருத்தி அமைப்பது என்பது எவ்வளவு பெரிய சேவை. அப்படி எதிர்காலத்தில் சேவை செய்பவர்களையே நினைத்து விழுந்து வணங்கியிருக்கிறான் பராக்கிரமன். ஐயகோ! விசுவநாதர் ஆலயத்துக்கு, ஆலயத்தை அணி செய்யும் ராஜகோபுரத்துக்கு, வராத் -தீங்கொன்று வந்து, இடிந்திருக்கிறது.