பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வேங்கடம் முதல் குமரி வரை

ஆனால் அத்தீங்கை நிவர்த்தி பண்ணித் திரும்பவும் கோயில் கட்டுவோர் ஒருவர்தான் இன்னும் தோன்றக் காணோம். (இப்போது அந்தக் குறை நிவிர்த்தி செய்யப்பட்டிருக்கிறது) பராக்கிரம பாண்டியனது நம்பிக்கையை நிலைநிறுத்த ஆள் இல்லாதே போய் விட்டது பெருங்குறைதான். அது காரணமாகவே சிதைந்த கோபுரத்துடன் நிற்கிறது காசி விசுவநாதர் கோயில், தென்காசியில்

பழுதற்ற கோபுரம்-தென்காசி

உள்ள அந்த காசி விசுவநாதர் ஆலயத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தென்காசி தென் பிராந்திய ரயில்வேயில் ஒரு ஜங்ஷன். வடக்கேயிருந்து ரயிலில் வருபவர் விருதுநகர் தென்காசி லயனில் தென்காசி வந்து சேரலாம். இல்லை காரில் செல்பவர்கள் திருநெல்வேலியிவிருந்து மேற்கே முப்பது மைல் சென்றால் தென்காசி வரலாம். ஊருக்கு நடுவே கோயில், கோயிலை இனம் கண்டு பிடிப்பதுதான் எளிதாயிற்றே, சிதைந்த கோபுரம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாமே. கோயில் பெரிய கோயில், நல்ல சுற்று மதில்களுடன் கூடியது. கிழமேல் 554 அடி நீளமும் தென்வடல் 318 அடி அகலமும் உள்ளது. கோபுர் வாயிலைக் கடந்து உள் சென்றதும்