பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வேங்கடம் முதல் குமரி வரை

இதற்கும் தென்பக்கத்தில் தான் அம்மையின் சந்நிதி. அம்மை செண்பக மலர்க்கீழ் இருந்து அருளாட்சி புரிந்திருக்கிறாள். இங்குள்ள தல மரம் செண்பகமே. 'செண்பக மலர்க்கீழ் மேவும் சிவக்குறி' என்று இறைவனும் 'நீழல் நல்கும் பவள மல்லிகை' என்று இறைவியும் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஆதியில் இந்தத் தென்காசி செண்பக வனமாக இருந்திருக்கிறது. மாறன் மங்கலத்திலிருந்து அரசாண்ட குலசேகர பாண்டியனே முதன் முதலில் விசுவநாதரை வழிபட்டு உலகநாதன் என்ற பிள்ளையைப் பெற்றிருக்கிறான். உலகநாதனுக்கு உலகம்மையே மகளாகப் பிறந்து குழல்வாய் மொழி என்ற பெயரோடு வளர்ந்து வந்திருக்கிறாள், அக் குழல்வாய் மொழியை விசுவநாதரே வந்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அப்படித் திருமணம் நடந்த இடமே குலசேகரநாத சாமி கோயில், இந்தக் கோயில் தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் பெரிய கோயிலிலிருந்து ஆறு பர்லாங்கு தூரத்தில் இருக்கிறது. உலகநாத பாண்டியருக்குப் பின் பல பாண்டியர்கள் மாறன் மங்கலத்திலிருந்து ஆண்டிருக்கிறார்கள். விந்த பாண்டியன் காலத்திலே மாறன் மங்கலம் விந்தன் நல்லூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த விந்தனுடைய பேரனே அரிகேசரி, பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன் என்ற பெயர்களோடு வாழ்ந்திருக்கிறான். இவரது காலம் வரை விசுவநாதர் செண்பக மரத்தடியிலும், உலகம்மை பவள மல்லிகை நிழலிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குக் காசிகண்ட பராக்கிரமன் கோயில் கட்டி நகரமும் அமைத்திருக்கிறான். இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் சாலிவாகன சகாப்தம் 1368. அதாவது கி.பி.1445ல் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இதனை,

ஊன்று சாலிவாகன
சகம் ஆயிரத்தொரு
மூன்று நூற்று அறுபானெட்டில்
முது மதிக்குலத்துத்