பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

முதல் பதிப்பின் போதே, இந்த நான்கு தொகுப்புக்களுக்கும் என் தந்தையாரின் உற்ற நண்பர்களாக விளங்கிய நால்வர் அற்புதமான முகவுரைகளைத் தந்து உதவியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி உணர்ந்து சொல்லும் சத்தியப் பிரமாணமாக அவை இந்தத் தொகுப்பினை அரண் செய்கின்றன. இதைவிட அருமையாக வேறு யார் சொல்லக் கூடும்? ஆகவே, இந்தப் புதிய பதிப்பிற்கும் அந்தப் பழைய முகவுரைகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நால்வரின் அன்புக்கும் தலைதாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.

தொண்டைமானவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த சமயம், முதலில் நூற்றெட்டுக் கோயில்களைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் எழுதி முடித்தபோது 121 கோயில்கள் இடம் பெற்றன. தொகுப்பு வெளியிடப்பட்ட பின்னர் விடுபட்டுப்போன மற்ற கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாயின. அவற்றை எல்லாம் தொகுத்து, இந்தத் தலைப்பின் கீழ் ஐந்தாம் பாகமாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை அண்மையில் கலைஞன் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. “வேங்கடம் முதல் குமரி வரை” தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்புதான், தொண்டைமானவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள திருக் கோயில்களின் மூர்த்தங்களையும், கலைச் செல்வங்களையும் கண்டு சொல்லப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளும் அபிராமி நிலையத்தின் வெளியீடாகவே “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட ஆர்வம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமன்று, இந்தியத்திருநாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்களும், ஏன் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழன்பர்களும்