பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வேங்கடம் முதல் குமரி வரை

என்ற பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குலசேகரர் பலதலங்களுக்கும் சென்று. கடைசிக் காலத்தில் வந்து தங்கியிருந்த இடம்தான் வித்துவக்கோடு. இந்த வித்துவக்கோடு மலை நாட்டில்

குலசேகரர்

உள்ள தலம் என்று கருதுபவர்கள் பலர். இல்லை, கரூரை அடுத்த வித்துவக் கோட்டக் கிரகாரமே என்பார் சிலர், இன்னும் சிலர் இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோயிலே என்பர். எந்தத் தலமாக வேணும் இருக்கட்டும். வங்கத்தின் கூம்பு ஏறிய மாப்பறவை போல் பல தலங்களுக்கும் சென்ற குலசேகரர் கடைசியில் வந்து தங்கிய இடம் மன்னார் கோயில் என்பதில் விவாதம் இல்லை. அந்த மன்னார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டத்திலே அம்பாசமுத்திரம் என்னும் ஊருக்கு வடமேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கு செல்ல அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு செல்லவேணும். காரில் வந்தால் நேரே ஊரில் போய் இறங்கலாம். அம்பாசமுத்திரம் - தென்காசி ரோட்டில் பஸ்ஸில் வந்தால் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இறங்கி நடந்து ஒரு மைல் வடக்கு நோக்கிச் செல்ல வேணும். ஊரை அடுத்துக் கருணை நதி ஓடுகிறது. கோயில் வாயிலில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதனைப் பந்தல்