பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

195

இவனையே 'நிறைகொண்ட சித்தையன் நெல்வேலி வென்ற சீர்நெடுமாறன்' என்று சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார். நெடுமாறனோ முதலில் சமணனாக இருந்து பின்னர். சம்பந்தரால் சைவனாக்கப்பட்டவன் என்பது பிரசித்தம். . இவனது காலம் சி.பி. ஏழாம் நுற்றாண்டு. இவனுக்குப் பின் வந்த பாண்டியர்கள். நாயக்க மன்னர்கள் எல்லாம் கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள்.

கி.பி. 950 இல் இருந்து அரசாண்ட வீரபாண்டியன் சோழர்களை வென்ற வரலாற்றைக் கூறுகிறது சில கல்வெட்டுக்கள், பதின்மூன்று பதிநான்காம் நூற்றாண்டுகளில் இருந்த மாறவர்மன் சந்தர பாண்டியன், மாறவர்ம குலசேகர தேவன் முதலியவர்களது சாஸங்கள் பல கிடைக்கின்றன. இக்கோயிலில். இக் கல்வெட்டுக்களில் இறைவனைத் திருநெல்வேலி உடையார் என்றும் இறைவியைத் காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாயக்க மன்னர்களோ திருநெல்வேலியையே தலைநகராகக் கொண்டு கோயிலைப் புதுப்பிப்பதில், மண்டபங்கள் கட்டுவதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பாண்டியர், நாயக்கர்களோடு, மகம்மதிய பக்தர் ஒருவருமே சேர்ந்து கொள்கிறார். முகம்மது அலியின் தானாதிபதி அன்வர்டிகான் என்பவரது மனைவியின் தீராத நோயைத் தீர்த்திருக்கிறார் இந்த நெல்லையப்பர். அந்த ஞாபகர்த்தமாக அன்வர்டிகான் ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அன்வர்டிகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இன்று நல்ல தமிழில் அனவரத நாதனாகவே விளங்குகிறார். கோயிலின் தென் கிழக்கு மூலையில்.

இந்த நெல்லையப்பர் கோயில், ஐந்து கோபுரங்கனோடு விளங்கும் ஒரு பெரிய கோயில்; ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட. ஒரு விரிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இறைவன் சந்நிதிக் கோபுரத்தை விட, இறைவி