பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

197

ஒன்று இருக்கிறது. அழகிய சொக்கநாதப்பிள்ளை பாடிய காந்தியம்மை பிள்ளைத் தமிழ் படிக்கப் படிக்க இன்பம் தருவது. நெல்லை மும்மணிக்கோவை, நெல்லை வருக்கக் கோவை, நெல்லை அந்தாதி என்ற இலக்கியங்கள் பெற்றது. நெல்லையப்பர் கோயிலில், காந்திமதியம்மை சந்நிதி வழியே நுழைந்தோம். திரும்பும்போது அவள் சந்நிதி சென்று வணங்கித் திரும்பலாம்.

ஏர்கொண்ட நெல்லை நகர் இடம் கொண்டு
வலங்கொண்டு அங்கு இறைஞ்சுவோர்கள்
சீர்கொண்ட தன் உருவும் பரன் உருவும்
அருள் செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும்
வேய்ஈன்ற முத்தைமிக விரும்பிப்பூணும்
வார்கொண்ட களபமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வோம்.

என்ற பாடலைப் பாடிக்கொண்டே வாழலாம் தானே! அப்படியே வாழ்கிற நான், ஒரு திருநெல்வேலிக்காரன் என்பதில் எப்போதும் கர்வம் கொள்கிறவன் ஆயிற்றே! .