பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வேங்கடம் முதல் குமரி வரை

வரிசைத் தூண்களில் முதலிலேயே நிற்பான் அவன். சிவபிரானை மதியாத மாமனார் தக்ஷனையும் அவன் செய்த வேள்வியையுமே அழிக்கப் புறப்பட்டவன் ஆயிற்றே.

பார்த்த திக்கினில்
கொடிமுடி ஆயிரம் பரப்பி
ஆர்த்த திண்டய
வரை இரண்டாயிரம் துலக்கி
பேர்த்த தாள்களில்
அண்டமும் அகண்டமும் பொர
வேர்த் தெழுந்தனன்
வீரரில் வீர வீரன்

என்று திரிகூட ராஜட்ப கவிராயர் பாடியிருக்கிறாரே இவனைப் பற்றி. அந்த வீரருள் வீரனைக் கேடயமும் வாளும் ஏந்திய கையனாய்க் காலை வீசி வளைத்துப் போருக்குச் செல்லும் கோலத்தில் நேருக்கு நேர் பார்த்தால் நம் உள்ளத்தில் அச்சம் எழுவதில் வியப்பில்லை . இவனது துணைவனான வீரன் ஒருவனும் எதிர்த்தூணில் இருக்கிறான். இந்த வீரபத்திரனை அடுத்து மன்மதன்,

தேர் இஎம் தென்றலாக
செழுங்குடை. மதியமாக
தூரியம் கடல்களாகச்
சொற்குயில் காளம் ஆக
நாரியர் சேனையாக
நறைவண்டு விடு தூதாகப்
பாரினில் விஜயம் செய்யும்
படைம்தன்

ஆயிற்றே அவன். ஆனால் இங்கே கரும்பு வில் ஒன்றை மட்டுமே ஏந்திய கையனாய், மற்றப் படைக்கலங்களையெல்லாம் துறந்து நிற்கின்ற கோலத்தில் காண்கிறோம். ஆஜானுபாகுவாக இவன் இல்லை. கொஞ்சம் கட்டுக்குட்டென்றே நிற்கிறான். இவனுக்கு எதிர்த்த தூணில் அன்னத்தின் மீது ஆரோகணித்து வரும் ரதிதேவியோ பெண்மைக்கே ஓர் எடுத்துக் காட்டு. காமனும் கண்டு காமுறும்