பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வேங்கடம் முதல் குமரி வரை

ஆழ்வார் திருநகரி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலிக்குக் கிழக்கே இருபது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் வழியாகச் சென்று ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனில் இறங்கலாம் இல்லையென்றால் திருநெல்வேலி-திருச்செந்தூர் ரோடு வழியாக பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். ரோட்டை அடுத்தே கோயில் இருக்கிறது. ஊருக்கு நடுவில் ஆதிநாதர் ஆழ்வார் கோயில் இருக்கிறது. இந்த ஊரிலே தெற்குமாடத் தெருவிலே திருவேங்கடமுடையான் கோயிலும் மேல் புறம் திருவரங்கநாதன் கோயிலும் வடக்குமாடத் தெருவிலே பிள்ளை லோகாச் சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் கோயில்களும் இருக்கின்றன. எல்லோருமே நம்மாழ்வாரைக் காணத்தேடி வந்தவர்கள் போலும். பஸ்ஸில் போனாலும் ரயிலில் போனாலும் நாம் முதலில் சென்று சேர்வது ஆதிநாதர் கோயிலின் சந்நிதி வாயிலில்தான். ஒருநாள் பிரம்மா திருமாலை வைகுந்தத்தில் வனங்க அவர், 'உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே நாம் தண்பொருநை நதிக்கரையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை எமது வாசஸ்தலமாகக் கொண்டிருக்கிறோம்.அதனையே ஆதிக்ஷேத்திரமாகக் கொண்டு வழிபடு' என்று உபதேசிக்கிறார். அதன் பிரகாரம் பிரம்மா வந்திருக்கிறார். அப்படி வரும்போது ஆற்றிலே ஒரு வலம்புரிச் சங்கு மிதந்து வந்து திருச்சங்கனித் துறையில் ஏறி, அங்கிருந்த ஆதிநாதரைச் சுற்றி விட்டுச் சென்றிருக்கிறது. இதனைக் கண்டு பிரம்மா இப்படித் திருமால் உகந்து இடம் பிடித்துக் கொண்டு தலத்திலே இருந்த தலத்திலே ஆதிநாதரை ஆராதித்து சத்யலோகம் திரும்பியிருக்கிறார். திருமாலே குருவாக வந்து உபதேசித்த தலமானதால் இத்தலம் குருகர் என்று! பெயர் பெற்றிருக்கிறது.

கோயில் வாயிலின் அழகை, ஸ்ரீ வைகுந்தத்தில் போலவே, ஒரு தகரக்கொட்டகை கெடுக்கிறது. அதைச் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய மண்டபம், அதில் தான் இராமாயணக் குறடு இருக்கிறது. அதைத் தாண்டி மேற்சென்றால் கோபுர வாயில், அதை அடுத்தே