பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27. செந்தில் ஆண்டவன்

ஒரு கவிஞன் தமிழ்க்கடவுள் முருகனிடத்து அளவு கடந்த பக்தி படையகனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்பதை அறிகிறான். ஆம், 'என்றும் இளையாய் அழகியாய்' என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையில் வந்தவனல்லவா? கலிஞன் என்றால்தான் அவனோடு வறுமையும் உடன் பிறந்து வளருமே; வறுமையால் தவிகின்றான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாடுகிறார்கள். இந்த வலுமையையெல்லாம் துடைக்க அந்தக் கலியுக வரதன் முருகனிடம் முறையிடச் சொல்லி அவன் மனைவி வேண்டுகிறாள். 'தேவர் துயரையெல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயர் துடைப்பதுதானா பிரமாதம்?' என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் கவிஞனோ மெத்தப் படித்தவன். இந்த முருகளோ சின்னஞ்சிறு பிள்ளைதானே! அன்னை மடிமீதிருந்து இந்த இளவயதில் அன்னை அமுதுட்டினால் தானே உணவருந்தத் தெரியும்? அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை, அதனால் அவளோ அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு. அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பாள், இப்படியெல்லாம் தாயோடு விளையாடும் இந்த வயதில், பக்தர்கள் துயரையெல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை, நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும் ஆற்றல்தான் இருக்குமா? பிள்ளை கொஞ்சம் வளர்ந்த பெரியவனாகட்டும், நல்ல கட்டிளங்காளையாக, வீர புருஷனாக வளர்ந்து பின்னால் அன்றோ அவனால் தன் துயர் துடைத்தல் கூடும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப் போட்டுக்கொண்டு வருகிறான் ஒன்றிரண்டு வருஷங்களாக. ஆனால் ஒருநாள் அவனது நண்பர் ஒருவர். திருச்செந்தூர் செல்பவர்,