பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28. வானவாமலைத் தோத்தாத்திரிநாதர்

ஆடுங் கடை மணி
ஐவேல் அசதி அணிவரைமேல்
நீடும் கயற் கண்ணியார்
தந்த ஆசை நிகழ்த்தரிதால்
கோடும், குளமும், குளத்தருகே
நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்
தோன்றுது என் கண்களுக்கே

என்று ஒரு பாட்டு. ஒளவையார் பாடிய அசதிக் கோவையில் உள்ள பாட்டு. ஒளவைப் பிராட்டி ஒரு நாள் மதிய வேளையில் ஒரு குக்கிராமத்துக்குப் போகிறார். அவருக்கு நல்ல பசி. அப்போது வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு குடியானவன் ஔவைக்குக் குடிக்கக் கூழ் கொடுக்கிறான். ஔவை அவன் பெயர் என்ன? என்று கேட்கிறாள், 'அசத்துப் போச்சே' என்கிறான். ஊர்ப் பெயர் கேட்கிறாள்; தன் பெயரையே மறந்து போனவன் ஊர்ப் பெயரை ஞாபகத்தில் வைத்திருப்பானா? அதுவும் மறந்து போச்சு என்கிறான். ஊரில் ஏதாவது முக்கியமான காட்சி இருக்கிறதா என்கிறாள். தன் ஊருக்கு அடையாளமாக ஐந்து வேலமரங்கள் இருக்கின்றன என்கிறான். அதனால் 'ஐவேல் அசதி' என்று அவன் பெயரை உருவாக்கிக்கொண்டு ஒரு கோவையே பாடி விடுகிறாள் ஔவை. பாடல் நல்ல காதல் துறையில் அமைந்த பாடல். இதே போல் நான்கு ஏரிகள் சூழ்ந்த ஒரு தலம். அங்கு ஒரு கோயில். அக்கோயிலில் இருப்பவர் தோத்தாத்திரி. வந்த வணங்குவார்