பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

233

உடையவர். அந்த மகானையும் தரிசித்து விட்டுப் பிறகு நடக்கலாம். கோபுர வாயிலைக் கடந்து கோயில் உள்ளேயே நுழையலாம். கோயில் வாயிலைக் கடந்ததும் நம் கண்முன் வருவது ஜெவந்தி மண்டபம். ஜெவந்தி நாயக்கர் என்றும், ஜெவந்தி ராஜா என்றும் அழைக்கப்பட்டவரால் கட்டிய மண்டபம் இது. நான்குநேரி தாலூகாவிலே ஜெவந்திபுரம் என்று ஓர் ஊரே இருக்கிறதே. சங்கரன் கோயிலிலும் ஜெவந்தி வாசல் இருக்கிறதே. ஜெவந்தி நாயக்கர் என்பவர் பக்தியோடு நல்ல திருப்பணிகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று அறிகிறோம்.

உற்சவ காலத்தில் இம்மண்டபத்திலே வைத்து உத்சவரை அலங்காரம் பன்ணி உலாச் செய்ய எழுந்தருளுவிப்பார்கள், இம் மண்டப முகப்பில் சாமரை ஏந்திய ஊர்வசி, திலோத்தமை இருவரும் நிற்கிறார்கள். இவர்களை நாம் கருவறையிலுமே பார்க்கப்போகிறோம். இந்த மண்டபத்தைச் சுற்றி ஒரு பிராகாரம். மண்டபத்தின் வடபுறம் உள்ள அறைகளில்தான் வாகனங்கள் எல்லாம் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இடப்புறம் இருப்பது வீரப்ப நாயக்கர் மண்டபம். இங்குள்ள தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள் உண்டு ஒவ்வொரு தூணிலும் நான்கு ஐந்து வடிவங்களைச் செதுக்கியிருக்கிறான் சிற்பி. அவைகளில் சிறப்பானவை அனுமனை அணைத்து . நிற்கும் ராமனது திருக்கோலமும், பீமனை எட்டிப் பிடிக்கும் புருஷா மிருகமும், இன்னும் வீரபத்திரன் முதலிய சிலைகளும் உண்டு.

இந்த மண்டபத்தை அடுத்தே லக்ஷிமி நாராயணன், லக்ஷிமி வராகர், வேணுகோபாலன், தசாவதார சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. ஜெவந்தி மண்டபத்துக்குப் பின்னால் உள்ள கொடிமரத்தைக் கடந்தே உள் கோயிலுக்குச் செல்ல வேணும், இந்த மண்டபம் தான் குலசேகர மண்டபம். இங்குதான் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இங்கேயே மணவாள மாமுனி, உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியர் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இன்னும்