பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

235

கருடனொடு சேனையர் கோன்
திரு ஆணை தெரியும் கருத்தினொடு
பணிந்து முணர்முறை உறவே இருப்பக்
கனிவுளத்தோடு இருமருங்கும்
கவரி இரட்டினராய்க் கவின் மலியும்
ஊர்வசி திலோத்தமையர் அமைய.
வருகதிர்கொன் பரிதியொடு
திங்கள் எனும் இருவர்மனை நினைத்து
தலைவணங்கி வாழ்த்தி அருகிருக்க
வாழ்வை எலாம் அடியவர்க்கு
அருளுவதே நினைந்தான் வானமலை
அரவணையின் வள்ளல் அடிபணிவாம்,

என்ற பாட்டுத்தான் எவ்வளவு விளக்கமாகக் கூறி விடுகிறது. இந்த மூலவருக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்திலேதான் உபய நாச்சியார், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் முதலியோர் பக்கம் இருக்கத் தெய்வநாயகன் என்னும் உற்சவமூர்த்தி பட்டாடை அணிந்து மகரகண்டி முதலிய அணிகளும் அணிந்து பெரியதொரு பீடத்தில் எழுந்தருளியிருக்கிறான், இந்தத் தெய்வ நாயகனையும், ஸ்ரீவரமங்கைத் தாயாரையும், நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களில் மங்களாசாஸணம் செய்திருக்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடியிணைமிசை
மொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை
ஸ்ரீவரமங்கை மேயபத்துடன்
வைகலில் பாடவல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே.

என்ற பாடலில் தெய்வநாயகன் ஸ்ரீவரமங்கையெல்லாரும் இடம் பெறுகின்றனர்.

இக்கோயிலில் உள்ள மூலவர் எல்லாரும் அன்று இருந்த ஏரியின் நடுவில் இருந்த பெரியதொரு பாறையிலேயே வடிக்கப்