பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239

கயத்தச் சிறு மீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பதுதான் குறள் வடிவமும் அப்படித்தானே. பேரண்டத்திலுள்ள தத்துவங்களையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது அந்த வாமன வடிவம். இத்தனையையும் சொல்கிறான் கம்பன்.

காலம் தனித்து உணர்
காசிபனுக்கும்
வால் அதிதிக்கும் ஓர்
மாமகவாகி
நீல நிறத்து
நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின்
அருங்குறள் ஆனான்

என்பது பாட்டு, இந்த வாமனன்-குறளன் தோன்றிய தலம்தான் குறுங்குடி, குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது. அக்குறுங்குடியிலே அழகிய நம்பி வந்து கோயில் கொள்கிறான், அந்தத் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊர். திருநெல்வேலி ஜங்ஷனுக்குத் தெற்கே பத்தொன்பது மைல் சென்றால் நாங்குநேரியைச் சேருவோம். நாங்குநேரி ஊருக்குள் போகாமல் ஊருக்கு வடபுறத்திலே மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பினால் கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டு பாதைகள் பிரியும். அவற்றில் தென்மேற்கு நோக்கிச் செல்லும் பாதையே குறுங்குடிக்குச் செல்லும். நாங்குநேரி வரை நல்ல ரோடுதான். அதன் பின் அவ்வளவு நல்ல ரோடு இருக்காது. திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பணகுடி செல்லும் பஸ் ஒன்றைக் குறுங்குடி வழியே திருப்பியிருக்கிறார்கள். ஆனதால் பஸ்ஸிலேயே செல்லலாம். வழியில் உள்ள ஏர்வாடி, நம்பித்தலைவன், பட்டயம் என்ற ஊர்களையும், இடைவரும் நம்பியாற்றையும் கடந்தே குறுங்குடி சென்று சேர வேணும்.

தென்புறமாகக் கோயிலைச் சுற்றிகொண்டு வந்தால் நீண்டு உயர்ந்த மதில் தெரியும். மதிலை ஒட்டி தல்ல தென்னை வைத்து