பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேங்கடம் முதல் குமரி வரை

தேவயானை திருமணம் என்னும் சிலைகள் உண்டு. இவை நிரம்பப் பழைய காலத்தியவை அல்ல என்றாலும், பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை.

இனி மலை ஏறலாம். பாதிப்படி ஏறியபின் வேள் ஆவி மரபில் வந்த வையாபுரிக் கோமான் உருவச் சிலை தாங்கிய மண்டபம் வரும், அங்கிருந்து பழநி நகரையும் மலையையும் அடுத்துள்ள வையாபுரிக் குளத்தையும் காணலாம். நல்ல அழகான காட்சி. மேலும் சில படிகள் ஏறினால் இடும்பன் கோயிலும் குரா அடி, வேலவர் கோயிலும் வரும். இடும்பன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

தமிழ் முனிவனான அகத்தியருக்கு ஓர் ஆசை, தாம் கையிலையிலே பூசித்த சிவகிரி, சக்திகிரி என்னும் குன்றுகளையும் தென் திசைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று. இது அவரால் முடிகிற காரியமாக இல்லை. அவரை வணங்க வந்த இடும்பாசுரன் என்பவனிடம் தம் விருப்பத்தை நிறைவேற்றச் சொல்கிறார்.

அவனோ மிக்க பலசாலி. இரண்டு குன்றுகளையுமே பேர்த்தெடுத்து அவற்றை ஒரு காவு தடியில் கோத்து, தன் தோளில் சுமந்து தென் திசை நோக்கி வருகிறான். தென் திசை வந்தவன் களைப்பாறக் காவு தடியை இறக்கி வைக்கிறான். இளைப்பாறிய பின் திரும்பவும் தூக்கினால் காவு தடியைத் தூக்க முடியவில்லை. மலைகளைப் பெயர்க்க முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது இந்த மலைகளில் ஒன்றின்பேரில் குராமர நிழலிலே மழலை முதிர்ந்த கனிவாயுடன் ஒரு சிறுவன் நிற்பதைக் காண்கிறான் இடும்பன்.

அவனாலேயே தன் காவு தடியைத் தூக்க முடியவில்லை என்று எண்ணிய இடும்பன் அவனை மலையைவிட்டு இறங்கி ஓடிப்போகச் சொல்கிறான், அவன் மறுக்க, இவன் அவன்மேல் பாய்கிறான். ஆனால் அடியற்ற மரமாக அங்கேயே விழுகிறான். இடும்பன் மனைவி ஓடி வந்து கதறுகிறாள், அகஸ்தியரும் வந்து சேருகிறார். இளங்குமரனோ அதுவே இருப்பிடம் என்று கூறுகிறான். அன்று முதல் இடும்பனைப்போல் யார் காவு தடி. தூக்கிவருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பதாகக்