பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வேங்கடம் முதல் குமரி வரை

சுசீந்திரம் கோயில் குளம்

நிறுத்தினான் என்றும் கர்ணபரம்பரை கூறுகிறது. நந்திக்குப் பக்கத்திலே கொன்றை மரத்தின் அடியிலே ஒரு லிங்கம். அனசூயையின் வேண்டுகோளுக்கிணங்கி மும்மூர்த்திகளே இங்கே லிங்கவடிவில் இருக்கின்றனர் என்பர். இந்தத் தலத்தின் தல விருட்சமும் கொன்றை மரம்தான்.

கொன்றை அடிநாதர் சந்நிதிக்குப் பக்கத்திலே கருடாழ்வார் சந்நிதி, இவற்றையெல்லாம் தரிசித்த பின்னரே துவஜஸ்தம்ப மண்டபத்தையும் கடந்து தாணுமாலயன் சந்நிதிக்கு வரவேணும், தாணுமாலயன் சந்நிதிக்குத் தென்புறமே விஷ்ணுவின் சந்நிதி, இங்கேதான் இங்குள்ள மண்டபங்களில் எல்லாம் பெரிய செண்பகராமன் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தை முப்பத்திரண்டு தூண்கள் தாங்குகின்றன. அத்தனை தூண்களிலும் அழகு அழகான சிற்பங்கள், செண்பகராமன் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் எல்லாம் கடந்தே தாணுமாலயனைத் தரிசிக்க வேணும். கருவறையில் தாணுமாலயன் லிங்க வடிவில் இருக்கிறார். திருமஞ்சனக் காலம் தவிர, மற்றைய நேரத்தில்