பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

255

அண்ணன்மாருக்கு ஒரு தங்கை வள்ளி என்றால், எட்டு அண்ணன்மாருக்கு ஒரு தங்கையாகக் குமரி பிறக்கிறாள்; வளர்கிறாள், எட்டு ஆண்மக்களுக்கும் ஒரு பெண்மகளுக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்கிறான் பரதன், குமரியிலிருந்து ஆண்ட இடமே இன்றைய குமரிமுனை என்கிறது ஒரு கதை.

அன்னை செய்யும் தவத்தைக் குறித்தும் ஒரு கதை; வசுதேவரையும் தேவகியையும் கம்ஸன் சிறையில் அடைத்து விடுகிறான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கிறான். அப்படிப் பிறக்கும் குழந்தை ஒன்றினால்தான் அவனுக்கு மரணம் என்று சோதிடர்கள் கூறி விடுவதால், ஏழு குழந்தைகளை இப்படிப் பறிகொடுத்த தேவகிக்குக் கண்ணன் பிறக்கிறான் சிறையில். வசுதேவருக்கு இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. இரவோடு இரவாக யமுனையைக் கடந்து, கோகுலத்தில் யசோதையிடம் கண்ணனைச் சேர்த்து விடுகிறார். அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் பக்கத்தில் கிடத்தி விடுகிறார். கம்ஸன் வந்து இந்தப் பிள்ளையை எடுத்துச் சென்று அதனைக் கொல்ல விழைகிறான். ஆனால் அந்தத் தெய்வக் குழந்தையோ அவனை இகழ்ந்து உதைத்துத் தள்ளிவிட்டு, அந்தரத்திலே மறைகிறது. இப்படி மறைந்த குழந்தையே திருமாலின் தங்கையான எல்லாம் வல்ல சக்தி. அந்த சக்தியே பகவதி என்னும் திருநாமத்தோடு இந்தக் கடற்கரையில் கையில் இலுப்பைப் பூ மாலை தாங்கிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். என்றும் கன்னியாக, குமரியாக நின்று தவம் செய்யும் பகவதியைத்தான் இன்று குமரி என்று வந்தித்து வணங்குகிறோம் நாம்.

இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் வேறொரு கதையும் உண்டு. பகன், மூகன் என்று இரண்டு அசுரர்கள் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறார்கள். தேவர்கள் முறையிட இறைவன் தன்னுடைய சக்தியை இரு கூறாக்கி இரண்டு பெண் தெய்வங்களாக உருவாக்குகிறார். இந்தச் சக்தியில் ஒன்றே வடகோடியில் கங்கைக்