பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

25

நாயகன் அந்த உலகத்து உடைமைகளிலேயே பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும்? ஆதலால்தான் அவன் தன் உடைமைகளை யெல்லாம் துறக்கிறான். அவன் துறவு கோலம் பூணுவது மக்களுக்கு அவர்கள் வேண்டும் பேறுகளையெல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான் நாம் பெறற்கரிய பேறுகனை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறலியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?

இந்தப் பழநி ஆண்டவர் வழிபாடு வேறொரு வகையில் சிறப்புடையதும் ஆகும். இங்கு வருவார் தொகையில் தமிழர்களைவிட அதிகம் மலையாள நாட்டினரே. மேலும்