பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேங்கடம் முதல் குமரி வரை

எழுதப்பட்டிருக்கிறது. அங்கு தாமரை இலைகளும்

விஜயாலய சோழிச்சரம்

மலர்களும் காயாமமலர்ந்து கிடப்பது கண் கொள்ளாக் காட்சி, வித்தகர் இயற்றிய கைவினைச் சித்திரம் அது. உள் மண்டபத்திலே உள்ளலிதானத்திலே அழகான ரத்தினக்கம்பளம் விரித்திருக்கும். ஆம் சித்திரத்தில்தான். அழியா வண்ணங்களால் ஆக்கப்பட்டவைதாம் என்றாலும் இன்று மங்கி மறைந்தே வருகின்றன. இச்சித்திரங்கள் தமிழன் சித்திரக்கலையில் அடைந்திருந்த தேர்ச்சியை விளக்கப் போதுமானதொன்று. இக்குடைவரையும் இங்குள்ள சித்திரங்களும் மகேந்திரவர்மன் சமணனாக இருந்த காலத்தில் உருவாகியிருக்க ளவேணும். ஆதலால் இவை மாமல்லபுரத்தின் பொற்காலத்துக்கு முந்தியவை. ஆகவே சென்று கண்டு மகிழ வேண்டியவை.

புதுக்கோட்டையிலிருந்து செல்லும் வழியாக மேற்கே பன்னிரண்டு மைல் சென்றால புல்வயல் அடவியின் மத்தியிலுள்ள குடுமியான்மலை வந்து சேருவோம். இங்குள்ள சிகாநாதர் கோயில் மிகப் பழைய கோயில், இங்குள்ள மூர்த்திக்குச் சிகாநாதர் என்ற பெயர் எப்படி வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ளலாமே.

மதுரையிலிருந்து ஆண்ட மன்னன் சுந்தரபாண்டியன் அர்த்தசாம காலத்துக்குப் பின்னேயே இக்கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலில் நீண்ட நேரம் இருந்த அர்ச்சகர் அர்த்த சாமம் முடிந்ததும், இறைவனுக்கு அணிந்திருந்த மாலைகளை எடுத்துச் சென்று தம்