பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

39

பின்னர் கீழே இறங்கி ஊரைச் சுற்றிக் கொண்டு வந்தால் முதலில் சத்தியமூர்த்தியாம் பெருமாள் கோயிலைப் பார்ப்போம். அதற்குக் கீழ்ப் பக்கத்தில் தான் சத்ய தீர்த்தம் என்னும் சிறு குளம் இருக்கும், இந்தச் சத்திய மூர்த்தியின் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தலம் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுகிறது. ஆதிரங்கம் என்றே அழைக்கிறார்கள். கோயில் வாயிலை ஓர் அழகிய கோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து சென்றால் ஒரு பெரிய மண்டபத்திடையே வந்து சேருவோம். தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள். இந்த மண்டபத்திலேயே ஆண்டாள் கண்ணன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. வலப்புறத்தில் நரசிம்மருக்கு ஒரு சந்நிதி.

இந்த மண்டபத்தையும் அதை அடுத்த மண்டபத்தையும் கடந்துதான் தாயார் சந்நிதிக்கு வரவேணும். தாயார் திருநாமம் உஜ்ஜீவனத்தாயார். அங்குள்ள ஆழ்வார் ஆச்சார்யர் சந்நிதிக்குப் பின்னால் தான் மகாமண்டபம் இருக்கிறது. அம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியவண்ணம் கருடாழ்வார் நிற்கிறார். இதை அடுத்தே சுந்தரபாண்டியன் குறடு. அதன் வழியாகச் சத்தியமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேணும். சத்தியமூர்த்தியின் கருவறை மலைச்