பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வேங்கடம் முதல் குமரி வரை

சரிவை ஒட்டியிருக்கிறது. தூண்களில் எல்லாம் புஷ்பப் போதிகைகள், தாமரை மொட்டுகள் எல்லாம் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சத்தியமூர்த்தியினை மங்கை மன்னன் மங்களா சாசனம் செய்திருக்கிறான்.

மையார் தடங்கடலும்
மணிவரையும் மாமுவிலும்
கொய்யார் குவளையும்
காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய
மலையானை, சாக்கேந்தும்
கையானைக் கைதொழாக்
கையல்ல கண்டோமே

என்ற பாடல் மிக நல்ல பாட்டாயிற்றே. இந்த மெய்யனையே சத்தியமூர்த்தி, சத்திய நாராயணர் என்றெல்லாம் அழைக்கிறார்கள், 'மொய் வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்தும் மெய் வண்ணம் நினைந்தார்க்கு மெய் நின்ற வித்தகன்' என்றே பாராட்டப்பட்டவன் இவன். இமயமலையிலிருந்து தவம் செய்த முனிவர் சத்தியரே இங்கு எழுந்தருளி இப்பெருமானைப் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி இருந்தாலும் இவர் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.

இந்தச் சந்நிதிக்கு மேற்கேதான் பாறையில் குடைந் தெடுக்கப்பட்ட குடைவரையுள்ளது. அக்குடைவரையின் உள்ளேயே போகசயனமூர்த்தியும் இருக்கிறார். இங்கு இவருடைய அனந்தசயனக் கோலம் எல்லாம் மலையைக் குடைந்து அமைத்தது. பாம்பணையனாக இருக்கும் ஆதிசேஷன் பெருமானுக்குக் குடை பிடிக்கிறான், பெருமானுக்கு ஸ்ரீ ரங்கத்தில் இருப்பது போலவே இரண்டு திருக்கரங்கள்தாம். ஒன்று ஆதிசேஷனுக்கு அருளுவது போல் உயர்ந்திருக்கிறது, மற்றொரு கை, வக்ஷ ஸ்தலத்தில் இருக்கும்