பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

47

விநாயக சதுர்த்தி, திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேதராக நடராஜர் வீதி உலா வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலைத் தீர்க்க, நடராஜர் எழுதிக் கொடுக்கும் பிடிபாடு மிக்க அழகானது. அதாவது தனக்கு எவ்வளவு சொத்திருக்கிறது என்பதை எல்லாம் அடுக்கடுக்காய் எடுத்துக் கூறிச் சிவகாமியின் ஊடல் தீர்க்க விரைவார். சிவகாமியின் ஊடல் தீர்கிறதோ இல்லையோ, கோயிலின் நிலபுல விவரம் முழுதும், ஆண்டுதோறும் மார்கழி அறுவடையில் ஊரார் எல்லாம் அறியப் படிக்கப் பெறுவது என்பது வரவேற்கத்தக்க தொன்றுதானே! இந்தக் கோயிலின் பெருந் திருவிழா விநாயக சதுர்த்தியே. ஆம்! பிள்ளையார் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தக் கோயிலில் சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமில்லைதான். விழா மற்ற ஊர்க் கோயில்களில் எல்லாம் நடைபெறுவது போல, பத்து நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடக்கும் விழாதான் இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்போடு நடத்தப்பெறுகிறது.

விழாவைப் பற்றிச் சொல்லுமுன் சதுர்த்தி விரதத்தைப் பற்றியும் அவ்விரதம் ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை.

ஒரு நாள் விநாயகர், தேவர்கள் எல்லாம் கண்டு களிக்கக் கைலாயத்திலே நர்த்தனம் செய்திருக்கிறார். சரிந்த தொந்தி, மோதகம் ஏந்திய கை, குறுகிய கால்கள் இவைகளுடன் ஆடிய விநாயகரது அல்லது விநாயகரைப் போன்ற உருவும் படைத்தவர்கள் நடனம் ஆடுவதைக் கண்டால், சிரிக்காமலிருக்க முடியுமா? ஒன்று சந்திரன், சிரிப்பை அடக்கியிருக்க வேண்டும். இல்லை. அப்படி சிரித்ததற்கு ஒரு பொய்யையாவது கற்பனை பண்ணிச் சொல்லத் தெரிந்திருக்க வேனும், இரண்டும் செய்யவில்லை. வாய்விட்டே சிரித்துவிட்டான் அவன். அவ்வளவுதான்; கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது விநாயகருக்கு. அதனால் பிடி சாபம் என்று கோபமாகச் சந்திரனைச் சபித்தே விட்டார். சாபமோ, அன்று முதல் சந்திரன் உருவை ஒருவருமே பார்க்கமாட்டார்கள். கண்ட்வரும் நிந்தை செய்து ஒதுக்கி லிடுவார்கள். அத்தகைய நீசனாக அவன் ஆகட்டும் என்பதுதான் சாபம். நல்ல கலை பொருந்திய உருவம் கொண்ட சந்திரளோ,