பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வேங்கடம் முதல் குமரி வரை

அன்று முதல் கலை இழந்து தேய்ந்து தேய்ந்து மெலிந்தான் கண்டவரும் வெறுத்து ஒதுக்கினர், வெட்கத்தால் உருவம் குன்றிய சந்திரன் பிரமனிடம் சென்று முறையிட்டான். சாபமிட்டவர்தால் சாப விமோசனத்தையும் அருளவேண்டும் என்று சொல்லிச் சந்திரனை விநாயகரிடத்தில் அழைத்துச் சென்றான் பிரமன், சந்திரனும் விநாயகர் திருவடியில் விழுந்து வணங்கி, தெரியாது செய்து பிழையை மன்னித்தருள வேண்டினான். பிரம்மாவும் அவனுக்காகட் பரிந்து பேசினார். 'தவறு செய்ததற்குத் தண்டனை வேண்டியதுதான் ஆனால் அது நிரந்தரத் தண்டனையாக இருக்கவேண்டாமே வருஷத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே அந்தத் தண்டனையை அவன் அனுபவிக்குமாறு அருள் புரியலாமே' என்றார் பிரமன் விநாயகரும் மனம் இரங்கிச் 'சுக்ல சதுர்த்தியில் உன்னைச் காண்பவர்களெல்லாம் வீண் அபவாதம் அடையட்டும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் என்னைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கட்டும்' என்றும் சாபத்தை மாற்றி அருளினார் இது காரணமாகத்தான் வளர்பிறையில் சதுர்த்தியன்று! இன்றும் மக்கள் சந்திரனைப் பார்க்காது ஒதுக்குகிறார்கள். அப்படித்தப்பித் தவறிப் பார்ப்பவர்களும், ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரதம் அனுஷ்டித்து விநாயகரை வணங்கிச் சாப விமோசனம் பெறுகின்றனர்.

இப்படித்தான் சதுர்த்தி விரதம் அன்று முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று பெறுகின்றன புராணங்கள், அதிலும் இந்த விரதம் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதம் என்றும் சொல்கிறது. காரணம் இந்த உலகத்தில் ஆண்களை விடப் பெண்களே காரணம் இல்லாமல் வீண் அபவாதத்துக்கு உள்ளாகிறார்கள். ஆதலால் அவர்கள் மேல் ஏற்படும் வீண் அபவாதங்கள் நீங்கவும் அவர்கள் மிகவும் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எண்னங்கள் சித்திபெறவும் சித்தி விநாயகரை அவர்கள் விரும்பிய சதுர்த்தி அன்று விரதம் அனுஷ்டித்து வணங்குதல் வேண்டும். வருஷம் முழுதும், இருபத்து நான்கு சதுர்த்தியிலும் விரதம் அனுஷ்டிப்பதோடு, ஆவணி மாதம்