பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சிளைத்திர சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு ரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாமிர சபையிலே முனிதாண்டவத்தையும் புரிகிறார் என்று அந்தந்தத் தல வரலாறுகள் கூறும், அப்படியானால் கௌரி தாண்டவம் ஆடிய இடம்தான் திருப்புத்தூர் சித்சபை என்று கண்டோம், இங்குள்ள சித் சபையில் இன்று நின்று நடனம் ஆடுபவர் ஆனந்த நடராஜர்தான்.

சிவசக்தியான கௌரி. பெருமானோடு ஊட, அவள்தன் ஊடல் தீர்க்க இந்தத் தாண்டவத்தை ஆடினார் இறைவன் என்பது புராணக் கதை, கௌரியம்மையார் தவங்கிடந்து இத்தாண்டவத்தைக் காணப்பெற்றார் என்பதும் ஒரு வரலாறு. இந்தத் தாண்டவக்கோலம் சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. நான்கு கைகளுடனும் வலது கையில் பாம்பையும் ஏந்திய கோலம். இன்னும் ஒரு, கரம் அபயகரம், மற்றொன்று கஜஹஸ்தம். முயலகன் பேரில் ஊன்றிய திருவடி எடுத்த பொற் பாதம். சுழன்று ஆடாத நிலை. இத்தகைய அற்புதக் கோலத்தில் ஆடிய தலமே திருட்புத்தூர். அத்தலத்துக்கு செல்கிறோம் நாம் இன்று.

தமிழ்நாட்டில் திருப்புத்தூர்கள் இரண்டு. ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், மற்றொன்று வட ஆற்காடு மாவட்டத்தில், இரண்டில் பாடல் பெற்ற தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதே. இந்த ஊர் காரைக்குடி ஸ்டேஷனிலிருந்து நேர் மேற்கே பதினைந்து மைல் தொலைவில் இருக்கிறது. மதுரைக்கு வடகிழக்கே 40 மைல் தூரம். மதுரையிலிருந்து செல்ல விரும்பினால் ஒன்று சொந்தக் கார் இருக்கவேண்டும். இல்லை, பஸ் பிரயாணத்தோடு திருப்தி அடைய வேண்டும், காரைக்குடியிலிருந்து காரில் சென்றால் வழியில் குன்றக்குடி முருகனையும், பிள்ளையார்பட்டி பிள்ளையாரையும் தரிசித்து விட்டே செல்லலாம். பிள்ளையார் பட்டிக்கும் திருப்புத்தூருக்கும் இடையே நான்கு மைல் தூரம்தான். மெயின் ரோட்டை ஒட்டியே கோயில் இருக்கிறது. இந்த ஊரில் அன்று