பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேங்கடம் முதல் குமரிவரை

கோட்டை இருந்திருக்க வேண்டும். இன்று இருப்பதெல்லாம் இந்த மதில்சுவர்கள்தாம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. சுவாமி கோலிலுக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், அம்பாள் சந்நிதிக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், இருக்கின்றன. கோயில் பெரிய கோயில் அல்ல. கோயில் திருவண்ணாமலை ஆதீனத்தார் மேற்பார்வையில்தான் இருக்கிறது.

கோயில் வாயிலில் ஒரு தகரக் கொட்டகை இருக்கும். அதைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் வயிரவர் சந்நிதி மேற்குப் பார்க்க இருக்கிறது. இங்கு

ஆனந்த நடராஜர்

வயிரவர் வரப்பிரசித்தி உடையவர். இந்தக் கோயிலில் திருமால் திருமகள் சந்நிதி, அகத்தீசுவரர் சந்நிதிகள் எல்லாம் உண்டு. தாண்டவ வடிவில் அங்கிருப்பவர் ஆனந்த நடராஜரே. கௌரி தாண்டவர் அல்ல. இத்தலத்தில் கருவறையில் இருப்பவர் திருத்தளி நாதர்