பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

55

அம்மை சிவகாமி, இக்கோயிலில் இருக்கும் செப்புச் சிலைகளில் உயர்ந்தவை, சிறப்பானவை. ராமர், சீதை, இலக்குமணர் சிலைகள் தான். இவை எப்படி இந்தச் சிவன் கோயிலுக்கு வந்தன என்று தெரியவில்லை. எங்கேயோ புதையுண்டு கிடந்தவர்களை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், இங்கே தான் வான்மீகர், அகத்தியர், திருமகள், இந்திரன் மகன் சயந்தன் எல்லாம் வழிபட்டதாக வரலாறு. ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை சயந்தன் பூசை நடக்கிறது. வெளிப் பிராகாரத்தில் மேல் பக்கத்தில் சப்த மாதர், தலவிருட்சமான கொன்றைமரம் ஆகியவை இருக்கின்றன.

இத்தலத்துக்கு அப்பர் வந்திருக்கிறார், சம்பந்தர் வந்திருக்கிறார்.

மீன் காட்டும் கொடி மருங்குல் :உமையாட்கு என்றும்
விருப்பவன் காண்; பொருப்பவலிச்
சிலைக்கை போன்கான்;
நன் பாட்டுப் புலவனாய்ச்
சங்கம் ஏறி நற் கனகக்
கிழி தருமிக்கு அருளி
னோன் காண்;
பொன் காட்டக் கடிக் கொன்றை
மருங்கே நின்ற
புனக் காந்தள் கைகாட்டக்
கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவில்
திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்
அவன் என் சிந்தையானே

என்பது; அப்பர் தேவாரம். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்துப் பாண்டியனிடம் பொற்கிழிபெற வைத்த வரலாறெல்லாம் கூறப்பட்டிருக்கிறது தேவாரத்தில், சம்பந்தரும் ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.