பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

61

இடம் ஆனதால் இதனைக் கோஷ்டியூர் என்றனர். அது காரணமாகவே, இத்தலத்தில் பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்தே காட்சியளிக்கிறார்கள்.

இக்கோஷ்டியூரிலிருந்துதான் கதம்ப முனிவர் பிரும்மாவை நோக்கித் தவம் புரிகிறார். அவர் தவத்தை மெச்சிப் பிரும்மா அவர் முன் தோன்றுகிறார். கதம்ப முனிவரோ, பெருமாளைப் பாற்கடல் பள்ளி கொண்ட கோலத்திலும் தேவர்களைக் காக்க நின்ற

திருக்கோட்டியூர் கோயில்-குளம்

கோலத்திலும் இரணியனை வதம் செய்ய ஆலோசனை சபை கூடிய போது இருந்த கோலத் திலும், இன்னும் இரணிய னோடு போர்புரிந்த கோலத் திலும், அவன் உடல் கிழித்து உதிரம் குடித்த கோலத்திலுமே காண வேண்டும் என்கிறார் (ஒன்றே ஒன்று. இதற்குப் பிரும்மாவைநோக்கித் தவம் கிடப்பானேன்? பரந்தாமனையே நோக்கித் தவங்கிடந்திருக்கலாமே!). பிரும்மாவும் கதம்ப முனிவர் வேண்டியபடியே விச்வகர்மன் முதலிய தச்சர்களைக் கொண்டு இக்கோயிலை அமைக்கவும், சிறந்ததொரு விமானம் அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் மூன்று தள விமானம், மூன்று