பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

63

கோயிலின் தென்புறத்திலே இரணியலோடு யுத்தஞ் செய்யும் மூர்த்தியும் வடபுறத்திலே இரணியனை வதம் புரியும் நரசிம்மரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இவர்களை தக்ஷிணேசுவரன், வடவேசுவரன் என்று அழைக்கிறார்கள்.

பிரதான கோயிலின் தென் பகுதியிலேதான் தாயார் சந்நிதி இருக்கிறது. தாயாரைத் திருமா மகள் என்கிறார்கள்.

நிலமகள் செவ்வி தோய வல்லான்
திமா மகளுக்கு இனியான்

என்றுதானே பெருமாளை அழைக்கிறான் மங்கை மன்னன். இன்னும் இங்குள்ள உத்சவமூர்த்தி கொள்ளியால் ஆனவன் என்பதையும் மங்கை மன்னனே,

வெள்ளியான் கரியான்
மணிநிற வண்னன்
வண்ணவர் தமக்கு இறை, எமக்கு
எள்ளியான் உயர்ந்தான்
உலகேழும் உண்டு உமிழ்ந்தான்.

என்றே பாடுகிறான்.

இக்கோயிலின் மூன்றாவது தளத்தில் ஏறியதும் இங்குள்ள விமானத்தையும் காணலாம். இதனை அஷ்டாங்க விமாணம் என்பர். அஷ்டாக்ஷர மந்திரத்தில் அறிகுறியாக விளங்குவதே இந்த விமானம் இந்த விமானத்தின் தென் பக்கத்து மதிலிலேதான் ராமானுஜரது சிலை வீதியை நோக்கிய வண்ணம் உபதேசக் கிரமத்தில் இருக்கிறது. இன்னும் தெற்காழ்வான சந்நிதிக்கு முன்னால் ராமானுஜரும், திருக்கோஷ்டி நம்பிகளும் குரு சிஷ்ய பாவத்தில் எதிர் எதிராக எழுந்தருளியிருக்கின்றனர். ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் உபதேசம் பெற பதினெட்டு தடவை இத்தலத்துக்கு வந்திருக்கிறார். நம்பியும் பதினேழு தடவைகள் தட்டிக் கழித்திருக்கிறார். கடைசியில் ராமானுஜர் பிடிவாதமாக இருக்கவே,