பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. காளையார் கோயில் காளீசர்

ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள், நல்ல பரம்பரைச் செல்வந்தர்கள். மூவரிலும் மூத்தவர் நல்ல உழைப்பாளி, விவசாய விருத்தியிலும், வியாபாரப் பெருக்கத்திலுமே கண். அதனால் குடும்பத்துக்குச் சொத்து சேர்ப்பதெல்லாம் அவர்தான். நடு உள்ளவரோ கொஞ்சம் குஷிப் பேர்வழி. நல்ல செலவாளி, மைனர் போலத் திரிவார், செலவு செய்யத் தயங்க மாட்டார். கோலாகலமாகச் செலவு செய்து கொண்டு உல்லாசமாகக் காலங்கழிப்பார், கடைக்குட்டி மிக்க அடக்கம், பொருள் சேர்க்கவோ, செவழிக்கவோ அவர் முற்படுவதில்லை. எப்போதும் படிப்பதும் பஜனைக்குச் செல்வதுமாகவே காலங்கழிக்கிறார். இப்படி ஒரு குடும்பம், இத்தகைய சகோதரர்களை நாம் வாழ்நாளில் பல இடங்களில் கண்டிருக்கிறோம் அல்லவா?

இதே விதமாக நாம் வணங்கும் கடவுளரும் வாழ்கிறார்கள் என்று அறிகிற போதுதான் நமது ஆர்வம் அதிகமாகிறது. அதில் முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமானது வாழ்க்கையிலேயே இப்படி நடக்கிறது. முத்தொழில் புரியும் முதல்வனே நாம் கண்ட மூன்று சகோதரர்கள் போல் மூன்று நிலையிலும் நின்று அருள் புரிகிறான் என்றால் கேட்கவா வேணும்! ஒரு சிறு ஊர். அங்கு ஒரு பெரிய கோயில், கோயிலிலே மூன்று சந்நிதி. கோயிலில் முதல்வராக இருப்பவர் காளீசர், அவருக்கு வலப்புறம் சோமேசர். இடப்புறம் சுந்தரேசர். இந்த மூவரையும் பற்றி ஊர் மக்கள் சொல்வது என்னவென்றால், 'காளீசர் தேட, சோமேசர் அழிக்க, சுந்தரேசர் சுகிக்க என்றல்லவா அமைந்திருக்கிறது என்பதுதான். இதற்கு விளக்கம் இதுதான். இந்தக் கோயில் சொத்து முழுதும் ஆம், நாற்பது கிராமங்களில் உள்ள நிலமும் இரண்டு லக்ஷம் பெறுமான நகைகள்