உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேங்கடம் முதல் குமரி வரை

வடிவில் அங்கு வண்ண உருவில், காட்டப்பட்டிருக்கும். கருவறையில் இருப்பவர் ராமலிங்கர். அவர் பக்கத்தில் இடப் பக்கத்தில் இருப்பவர் அனுமன் கொண்டு வந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட விசுவநாதர், இருவரையும் கருவறையில் சென்று கண்டு வணங்கலாம். இந்த ராமலிங்கரே உலகில் உள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாக விளங்குகிறார். இவர் மேனியிலே அனுமனது வால் தழும்பு இன்னும் இருக்கிறது.

ராமலிங்கர் நல்ல அபிஷேகப் பிரியர், அதிலும் கங்கா ஸ்நானத்தை விரும்புகிறவர். ஆதலால் வடநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் எல்லாம் கங்கா ஜலம் கொண்டுவந்து அபிஷேகம் செய்கிறார்கள். இந்த கங்காபிஷேகத்துக்கு நிபந்தனைகள் அதிகம். அதற்கெல்லாம் உட்பட்டே அபிஷேகத்துக்குச் சேவார்த்திகள் ஏற்பாடு செய்ய வேணும். இந்த ராமலிங்கர் சந்நிதி காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை எப்போதும் திறந்தே இருக்கும். இந்த நல்ல வசதி எல்லாக் கோயில்களிலும் கிடைப்பதில்லை யாத்திரிகர்களுக்கு. கருவறை செல்லுமுன் பிராகாரங்களை ஒரு சுற்றுச் சுற்றலாம். ராமேசுவர பிராகாரங்கள் {Corridors) பிரபலமானவை ஆயிற்றே. இந்தப் பிராகாரங்கள் ஒவ்வொன்றும் சுமார் நானூறு அடி நீளமும், இருபதிலிருந்து முப்பதடி அகலமும், அறுபது அடி உயரமும் உடையன. பிரும்மாண்டமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவ்வளவு பெரிய பிராகாரங்களை வேறு இடங்களில் காண முடியாது: கல் கிடையாது. ஒரு சிறு தீவுக்கு, இவ்வளவு பெரிய கற்களை எப்படிக் கொண்டு வந்தனர். எப்படி இந்தப் பிராகாரங்களை அமைத்தனர் என்பது பலருக்கும் லியப்பானதொன்றே.

இக்கோயிலில் மூன்று பிராகாரங்கள். மூன்றாம் பிராகாரமான வெளிப் பிராகாரத்திலேதான் பெரிய நடராஜரது வடிவம் ஒன்றும் இருக்கிறது. உள் பிராகாரத்தில் தான் ராமலிங்கர் கோயில் கொண்டிருக்கிறார். அங்குள்ள நவசக்தி மண்டபம் நல்ல வேலைப்படுடையது. அந்த பிராகாரத்திலேதான் பர்வதவர்த்தினி