பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

என்று அப்பர் பாடுகிறார். இத் திருப்பதிகங்களையெல்லாம் பாடி ராமேச்சுரம் மேவிய இறைவனை வாங்கிவிட்டு, தனுஷ்கோடிக்குச் சேது ஸ்நானத்துக்குச் செல்லலாம். ராமேச்சுரத்திலிருந்து 24 மைல் தூரத்தில் தனுஷ்கோடி இருக்கிறது. இங்குதான் வங்காளக் குடாக் கடல், இந்துமா சமுத்திரம் இரண்டும் கூடுகின்றன. மகோததி, ரத்னாகரம் என்னும் கடல்கள் கலப்பதாகப் புராணங்கள் கூறும். ராமேசுவரத்திலிருந்து கடற்கரை வழியாகத் தோனியில் ஏறிக் கொண்டும் சேதுக்கரை செல்லலாம். இது எல்லாம்

கோயில்

காற்று வசதியாக அடிக்கும்போதுதான் சௌகரியமாக இருக்கும். இல்லா விட்டால் பேசாமல். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் தனுஷ்கோடி செல்லுதலே சரியானது. மணற்பரப்பில் நாலு பர்லாங்கு நடந்துதான் சேது ஸ்நான கட்டத்துக்கு வரவேணும், தனுஷ் கோடி என்றால், ஒரு கோடி வில் என்று அர்த்தம். இங்கு தீர்த்தம் ஆடினால் ஒரு கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இங்கிருந்துதான் இலங்கை செல்ல ராமன் அணை கட்டியிருக்கிறான், அதனாலேயே சேது என்று அழைக்கப்படுகிறது.

வே மு.கு.வ-6