பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

திருக்குளத்தில் ஜலக்கிரீடை செய்திருக்கிறார்கள். அவர்கள், தம் தவத்தைக் கலைத்ததற்காக அவர்களை யக்ஷர்களாகப் போகும்படி சபித்திருக்கிறார். அவர்கள் சாப விமோசனம்வேண்டிய பொழுது அவர்களைப் புல்லாரண்யத்தில் புல்லர் வழிபட்ட பெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெற அருளியிருக்கிறார்.

இலங்கை செல்லும் இராமர் இங்கு தர்ப்ப சயனத்தில் கிடந்து வருணனை வேண்டியிருக்கிறார். பின்னர் இங்குள்ள எம்பெருமானையும் வணங்கியிருக்கிறார் அவரும் ராமனுக்கு வில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அது காரணமாக, புல்லணி எம்பெருமானுக்குத் திவ்ய சரபன், தெய்வச் சிலைமன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. பின்னர்தான் வருணன், ராமர் முன்வந்து கடலைச்சுவற அடிப்பதை விட, சேது கட்டுதலே சிறந்தது என்று கூற அதன்படியே நளன் தலைமையில் சேது கட்டி முடிக்கப்படுகிறது. இங்கு தான் சேது கட்டத் தீர்மானம் ஆனதால் இதனை ஆதிசேது என்றும் அழைக்கின்றனர். புல்லர் முதலான ரிஷிகள் ஜகந்நாதனைச் சரண் அடைந்து பரமபதம் பெற்றது. இங்கேதான். கடற்கடவுளும்