பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஞாபகயாகக் கேட்டால் அர்ச்சகர் எடுத்து வைத்திருக்கும் திருக்கண்ணமுது கிடைக்கலாம். இரவில் போனால் தான் கட்டாயம் கிடைக்குமே.

இத்தலத்துக்கு வந்த நாம் ராமநாதபுரத்துக்கு வட்டகிழக் ஏழு மைல் தூரத்தில் உள்ள தேவி பட்டம் வரையில் சென்று அங்குள்ள பட்டாபி ராமனையும் வாங்கலாம். இங்குதான் ராமன் வருணனுக்கு அபயம் அளித்தார் என்று வரலாறு. இங்கு பிரதான தேவதை மற்ரிஷாசுரமர்த்தினி. அதனால்தான் தேவிபட்டணம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தத் தேவி பட்டணத்தை அடுத்து நவபாஷாணம் என்னும் சமுத்திர தீர்த்தம் வேறே இருக்கிறது இங்குதான் ராமர் நவக்கிரஹ பூஜை செய்திருக்கிறார். ஒன்பது குத்துக் கல்கள் கடலில் இருக் கின்றன. அந்த இடத்தில் அலை அடிப்ப தில்லை. இந்தத் தீர்த்தத்தில் நீராடிப் பக்கத்தில் உள்ள கோயிலில் மங்கள நாதர் மங்க ளேகவரி யையும் வணங் கினால் எல்லா நல்ல பலன் களும் சித்திக்கும் என்று நம்பிக்கை. அவகாசம் உள்ள வர்களெல்லாம் தேவிபட்டணம், நவபாஷாணம் எல்லாம் சென்றே திரும்பலாம் நல்ல பலன்கள் கிடைக்குமென்றால் தயக்கமில்லாமல் செல்வதற்கு மக்கள் முன்வருவதில் வியப்பென்ன.