பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

95

காப்பாற்றுகிறார். அந்தச் சீடரையே, இறைவன் வாதவூரராக அவதரிக்கச் செய்கிறார். பின்னர் அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சேர்ந்த பாண்டியன், பிட்டு வாணிச்சி முதலிய எல்லோருக்குமே முத்தியளிக்கிறார். இந்த மணிவாசகர் பாடிய பாடல்களே திருவாசகம். திருவாசகம் பன்னிரு திருமுறைகளிலே ஒன்றாக இடம் பெறுகிறது.

காருறு கண்ணியர் ஐம்புலன்
ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய்
விளங்கும் திருவார்
ஊருறைவாய், மன்னும் உத்தர
கோச மங்கைக் கரசே!
வாருறு பூண் முலையாள் பங்க!
என்னை வளர்ப்பவனே,

என்றுதானே இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்.

மணிவாசகர், திருவாசகம் என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆரம்பித்தால், அவர் பாடிய தில்லைக் கூத்தனின் அற்புத நடனம் எல்லாம் நம் கண்முன் வருமே. தில்லை மூதூர் ஆடிய திருவடியை நினைந்து நினைந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம் உள்ளத்தை உருக்குமே. ஆம், இந்த உத்தரகோச மங்கையிலும் பெரிய திருவிழா மார்கழி மாதத்துத் திருவாதிரை உத்சவம்தானே, இந்த எண்ணத்தில் திளைத்துக் கொண்டேதான் உத்தரகோச மங்கைக்குச் சென்றேன் சில வருஷங்களுக்கு முன்பு. உத்தரகோச மங்கையில் மாணிக்கவாசகருக்குக் காட்டிய வித்தக வேடடத்தைக் கண்டு தொழ ஆசைப்பட்டேன். கோயில் நிர்வாகிகள் அழைத்துச் சென்றார்கள், கோயிலின் வடக்குப்பிராகாரத்துக்கு. அங்கு ஒரு சிறிய கோயில். அதுதான் நடராஜர் சந்நிதி என்றார்கள். . அங்குள்ள நடராஜர் நிரந்தரமாகச் சந்தனக் காப்புக்குள் மறைந்து நிற்கிறார். 'காரணம் வினவினேன். சொன்னார்கள் உடன் வந்தவர்கள். அந்த நடராஜத் திருவுருவம் மரகதத்தினால் ஆயது. அதனுடைய பிரகாசம் கோடி