பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேங்கடம் முதல் குமரி வரை

அதைக் கண்டெடுத்து, அந்த சொத்தை வைத்திருந்தவருடன் வழக்காடி கிட்டத்தட்ட 150 கோட்டை நன்செய் நிலங்களையும், தோப்பு முதலியவைகளையும் கோயிலுக்குச் சேர்த்திருக்கிறாள் இந்த அம்மையார். இப்படி இந்த அம்மையார் செய்த கைங்கரியத்தினால்தான் திருமலை முருகன், இம்மலை மீது நிலை பெற்றிருக்கிறான் என்று அறிகிறபோது நாம் பூரித்து விடுகிறோம்.

இத்திருமலை முருகனைக்காண நாம் நேரே செங்கோட்டை ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுக்க வேணும். அங்கிருந்து ஐந்துமைல் வண்டி வைத்துக் கொண்டோ நடந்தோ செல்ல வேணும். அவகாசம் இருந்தால் காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்ஸிற்காகக் காத்து நிற்க வேணும். தென்காசியில் இறங்கினாலும், குற்றாலத்தில் தங்கி இருந்தாலும் அங்கிருந்து காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்களிலும் செல்லலாம். சொந்தக்கார் உடையவர்கள் என்றால் ஜாம் ஜாம் என்று காரிலேயே சென்று மலையடிவாரத்தில் இறங்கலாம்.

அதன் பின் மலை ஏற வேணும். மலையடிவாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அதில் ஒரு கோயில். அங்கு இருப்பவர்தான் வல்லபை கணபதி. எல்லாம் வல்ல சக்தியையே தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டிருப்பார் அவர். அவரைக் கண்டதும் நமக்கு வடநாட்டு ஞாபகம் தான் வரும். வடநாட்டில் கார்த்திகேயன் கட்டை பிரமச்சாரி, கணபதிதான் சித்தி புத்தி என்னும் இருவரை மணந்தவர். அதே போலத்தான் திருமலையிலும் கணபதிதான் வல்லபையுடன் இருக்கிறார். அவர் தம்பி திருமலை முருகனோ தனித்தே நிற்கிறான். வல்லபை கணபதியை வணங்கி விட்டு மலைமேல் ஏறவேணும்.

முன்னர் அமைத்திருந்த பாதையில் 544 படிகளே இருந்தன. சில பகுதிகள் செங்குத்தாக ஏற வேண்டி