பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேங்கடம் முதல் குமரி வரை

களம் என்னும் தலம். அத்தலத்தை நோக்கியே நாமும் விரைகின்றோம். இன்று, நமக்கு கயிலை செல்லும் நோக்கமெல்லாம் இல்லாதிருந்தும் கூட.

திரு அஞ்சைக்களம் செல்ல, சென்னையிலிருந்து கொச்சின் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறவேணும். ஷோரனூர் எல்லாம் கடந்த பின் இருஞாலகுடா என்ற ஸ்டேஷனில் இறங்க வேணும். அங்கிருந்து கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூருக்கு வழி கேட்டுக் கொண்டு போக வேணும்.

போகும் வழியில் ஓர் உப்பங்கழியையும் கடக்கவேனும். முன்னாலே என்றால் இக்கரையில் காத்திருந்து படகில் ஏறித்தான் அக்கரை செல்ல வேணும். இப்போதோ . உப்பங்கழியில் பெரிய பாலம் ஒன்றையே அமைத்திருக்கிறார்கள். ஆதலால் காரிலோ பஸ்ஸிலோ ஏறிக் கொண்டு 'ஜாம் ஜாம்' என்று கொடுங்கோளூருக்கே போய் விடலாம். கொடுங்கோளூர் பகவதி கோயிலுக்கும் சென்று வணங்கி, அருள் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பின் மேற்கு நோக்கி ஒன்றரை மைல் போனால் திரு அஞ்சைக்களம் வந்து சேரலாம். உப்பங்கழி வழியாக படகிலே போனால் இறங்குதுறையில் இறங்கி, வடக்கு நோக்கி நடந்தால். கோயில் வாயில் வந்து சேரலாம். நாமோ, கொடுங்கோளூரிலிருந்து மேற்கு நோக்கியல்லவா வந்திருக்கிறோம். அங்கே ஒரு சந்நிதியில் கல்லால் அமைத்த தீபஸ்தம்பம் ஒன்று தெரியும்.

அந்தப் பக்கமாகத் திரும்பினால், ஒரு சிறு கட்டிடத்தில், சேரமான் பெருமாள் சுந்தர மூர்த்தி வாசக சாலை என்று தமிழிலே எழுதிய 'போர்டு' ஒன்று தொங்கும். கட்டிடம் திறந்து கிடந்தாலும் பதில் சொல்ல