பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆள் ஒருவரும் அங்கிருக்க மாட்டார்கள். அங்கிருந்து கோயில் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வதும் எளிதன்று - கோயிலுக்குத்தான் கோபுரம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாதே. கொஞ்சம் துணிந்து மேலே நடந்தால் சில ஒட்டுக் கூரைகள் தோன்றும். ஒரு பெரிய காம்பவுண்டும் தோன்றும்.

அதுதான் கோயில் என்பர். அங்குள்ள வாயில் கோயிலின் மேல்புறத்து வாயில். அந்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், அங்கு ஒரு மரக்கொட்டகை தெரியும். அதனையே ஆனைப்பந்தல் என்கிறார்கள். விழாக்காலங்களில் ஆனையை அலங்கரித்துக் கொண்டு வந்து நிறுத்தும் இடம் ஆதலால் ஆனை பந்தல் என்று பெயர் பெற்றதோ, இல்லை அன்று சுந்தரரை கயிலாயத் திற்கு அழைத்துச் செல்ல வந்த வெள்ளை யானை வந்து நின்ற இடம் ஆதலால் ஆனைப் பந்தல் என்று பெயர் பெற்றதோ, தெரியவில்லை. எப்படியோ ஒரு யானை வந்து அங்கு நின்றிருக்கிறது. அதனால் பந்தல் அமைக்க வேண்டும் என்றும் தோன்றியிருக்கிறது, மக்களுக்கு. இந்தக் கொட்டகையை ஒட்டியே ஒரு பெரிய பிராகாரம் இருக்கிறது. அதனைச் சுற்றிக் கொண்டு வடபக்கத்துக்கு வந்தால் அந்தப் பிராகாரத்திலேதான் தல விருட்சமான கொன்றை பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். அதனைச் சுற்றி ஒரு பீடம் இட்டு, சுவரும் எழுப்பியிருக்கிறார்கள்.

அதைக் கடந்தே கிழக்குப் பிராகாரம் வரவேணும். அங்கேதான் பிரதான வாயில். எல்லாம் ஒட்டுக் கூரைதான் என்றாலும் அந்த வாயில் சுவரில்தான் சுந்தரர் வெள்ளை யானையின் பேரில் கயிலை செல்லும் சிற்பம் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருக்கிறது. இப்படிச் செதுக்கி வைக்க வேண்டும் - என்று தெரிந்திருக்கிறதே, அதற்கே ஒரு கும்பிடு போடலாம் தானே? இந்தப் பிராகாரத்திலே