பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேங்கடம் முதல் குமரி வரை

ஆம், "நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்” நாராயணா என்னும் நாமம் என்று எக்களிப்போடு திருமங்கை மன்னனால் எப்படிப் பாடமுடிந்தது என்று அறிய விரும்பினால், குருவாயூரப்பன் சந்நிதிக்குச் சென்றால் போதும். கோயிலுள் சென்றதும் தீபஸ்தம்பம் இருக்கும் கீழ்பக்கத்து நடைபாதைக்கு வந்து சேருவோம். இப்படி கோயிலைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தையே மதிலகம் என்கின்றனர். அதன் தென் கீழ மூலையில்தான் கூத்தம்பலம் இருக்கிறது.

அங்குதான் மலையாள நாட்டிற்கே சிறப்பான கூத்துகள் நடக்கின்றன. விசேஷ காலங்களில் மற்ற காலங்கள் பாகவத பாராயணங்களும் நடக்கும். இதைக் கடந்து மேற்கே திரும்பினால் அங்கு ஒரு சாஸ்தா சந்நிதி. அங்கு வணக்கம் செய்து விட்டு பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்தால், திரும்பவும் கீழ் நடைபாதைக்கு வந்து கோயிலுள் நுழையலாம். இந்தப் பாதை குறுகலாகவே இருக்கும். இதற்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள மண்டபங்களே வாயில் மண்டபங்கள். இவைகளைக் கடந்தே உள்கோயில் செல்ல வேணும்.

இதுதான் உள் பிராகாரம். இந்தப் பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகருக்கு ஒரு சந்நிதியிருக்கிறது. இங்குள்ள ஆரத்துக் கெட்டிபடி என்ற இடத்தில் இருந்துதான் மேல்பத்தூர் பட்டாத்திரி என்பவர் அவருடைய பிரபலமான 'நாராயணீயம்' என்ற பிரார்த்தனை நூலை எழுதினர் என்பர்.

இவற்றை எல்லாம் கடந்தபின் திரும்பவும் கீழ்வாயில் வந்து கருவறையில் உள்ள குருவாயூரப்பனைத் தரிசிக்க வேணும். குருவாயூரப்பன் சுமார் இரண்டடி உயரமே உள்ள சிறிய வடிவினன் தான். புஷ்பாலங்காரம் பண்ணி வைத்திருப்பார்கள்.

இரவு வேளைகளில் சென்றால் விளக்கொளியில் பிரமாத அழகுடன் காட்சி தருவான். ஆனால் அவனை, அவன் மேனியை, அலங்காரமில்லாத மேனியைக் காண