பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

125

விரும்பினால், அதிகாலை மூன்று மணிக்கே கோயில் செல்ல வேணும். நடை திறந்ததும், இரவு இருந்த புஷ்ப அங்கி சேவையிலும் காணலாம். பின்னர் மலர்களைக் களைந்து தைலக் காப்பிடும்போது மேனியின் முழு அழகையுமே காணலாம். சங்காபிஷேகம், மலர் நைவேத்தியம் எல்லாம் நடந்தபின் வாயில் கதவை அடைத்து விடுவார்கள்.

ஆனால் காலை ஏழு மணி சுமாருக்கு, யானை மீது குருவாயூரப்பனின் தங்கச் சிலை ஒன்றை ஏற்றி, மதிலகத்தில் பவனி வருவர். அப்போது பன்னிரண்டு விளக்கு ஏந்திச் செல்வர். இவ்விளக்கு ஏந்திச் செல்லும் உரிமை சில அம்பல வாசிக் குடும்பத்தினர்க்கே உண்டு. இது முடிந்த பின்தான் க்ஷீர அபிஷேகம் என்னும் பாலபிஷேகம் நடைபெறும். இது காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த க்ஷர அபிஷேகம், நவகாபிஷேகம் பந்தாட்டி நைவேத்தியம் பூசைகள் எல்லாம் காலை 9.30 மணி வரை நடக்கும். அடுத்த பூஜை உச்சிக் காலம்தான். மத்தியானம் 12.30 மணிக்குத்தான். அதன் பின் கோயில் நடையைப் பூட்டிவிடுவார்கள். திரும்பவும் மாலை 5.30 மணிக்குத் தான் திறப்பார்கள்.

அப்போதும் ஒரு ஸ்ரீபலி ஊர்வலம் நடக்கும். இரவு 8 மணிக்கு நைவேத்தியம் பூசை எல்லாம் நடக்கும். கடைசியாக திருப்புகை கொழுத்தி இரவு 10.30 மணிக்கே நடை சாத்துவார்கள். கோயிலில் பிரசாதமாக சந்தனமும் மலர்களும் தான் கொடுப்பர். பால் பாயசம், அப்பம் முதலியவைகளும் கிடைக்கும். இவைகளை விலை கொடுத்தே வாங்க வேணும்.

இங்கு நடக்கும் பிரார்த்தனைகளில் சிறப்பானது துலாபாரமும், குழந்தைகளுக்கு அமுதூட்டுதலும், திருமணம் செய்தலுமே. தண்ணீர் முதல் நவரத்தினம் வரை, ஆளின் எடைக்கு எடை தருவதாகப் பிரார்த்தித்துக் கொள்வர். அப்படியே பிரார்த்தனை செய்தவரையும் அவர் கொண்டுவரும் பொருளையும் நிறை போட்டு